ஜம்மு காஷ்மீரில் இன்டர்நெட் சேவை முடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் பரிசீலனை செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது. இதனையடுத்து, அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் அங்கு இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. 


இன்டர்நெட் சேவை முடக்கம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், 


தனி நபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை காக்கவேண்டியது அரசு மற்றும் நீதிமன்றத்தின் கடமையாகும். இணையதளத்தில் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். இது சட்டப் பிரிவு 19ன் கீழ் வருகிறது. எனவே ஜம்மு காஷ்மீரில் அமலில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது பற்றி ஒரு வாரத்தில் ஜம்மு காஷ்மீர் அரசு பரிசீலிக்க வேண்டும்.


இவ்வாறு தெரிவித்தனர்.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.