தடையை மீறி தேசியக்கொடி ஏற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர்
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தடையை மீறி தேசியக்கொடி ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலக்காட்டில் உள்ள கர்ணகாயம்மன் உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மக்கள் பிரதிநிதிகள், பள்ளி ஊழியரோ, முதல்வரோதான் தான் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். மற்ற யாரும் தேசியக் கொடியை ஏற்றக் கூடாது என பாலக்காடு மாவட்ட ஆட்சியாளர் மேரி குட்டி நேற்று ஆணை பிறப்பித்தார். இந்த ஆணைக்கு எதிராக கேரளா பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் இன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தடையை மீறி தேசிய கொடியை ஏற்றினார். இச்சம்பவம் பாலக்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வை அடுத்து பள்ளி மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.