Independence Day 2023: இந்திய தேசமே வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று தனது சுதந்திர தினத்தை உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாட தயாராக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் உறுதிப்பாட்டின் மூலம் அடையப்பட்ட, காலனித்துவ ஆட்சியில் இருந்து தேசத்தின் விடுதலையை நினைவுகூரும் இந்த குறிப்பிடத்தக்க சந்தர்ப்பம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று, இந்தியாவின் தொடர் முயற்சி நனவாகியது, அதாவது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திரத்தை தேசத்திற்கு வழங்கிய நாள், இந்த நாள் ஆழமான வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.


பன்முகத்தன்மைக்கு ஒரு சான்று


சுதந்திர தினம் என்பது தேசிய விடுமுறையை விட மிக முக்கியமான ஒன்றாகும். இது பின் ஒரு காலத்தில் துன்பங்களை எதிர்கொண்ட இந்தியாவின் ஒன்றிணைவு மற்றும் ஒற்றுமையின் நினைவூட்டல் நிகழ்வு ஆகும். குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் உட்பட உயர்மட்ட பிரமுகர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்டமான கொடியேற்று விழா மூலம் வருடாந்த கொண்டாட்டங்கள் சிறப்பிக்கப்படுகின்றன.


மேலும் படிக்க | தந்தையின் மனைவியாக 10 ஆண்டுகள் நடித்த மகள்! காரணம் கேட்டா கடுப்பாவீங்க!


பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் வண்ணமயமான அணிவகுப்புகள், நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் மூலம் தங்கள் தனித்துவமான பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதால், இந்த நிகழ்வு இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மைக்கு ஒரு சான்றாகவும் உள்ளது.


விழாக்களுக்கு அப்பால், சுதந்திர தினம் என்பது பிரதிபலிப்புக்கான ஒரு சந்தர்ப்பமாகும். சுதந்திரம் பெற்றதில் இருந்து ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் எதிர்நோக்க இருக்கும் சவால்கள் குறித்து சிந்திக்க குடிமக்களை இந்த தினம் தூண்டுகிறது. இருப்பினும், இந்திய தேசம் தனது 76ஆவது சுதந்திரத்தை கொண்டாடுகிறதா அல்லது 77ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடுகிறதா என்ற குழப்பம் உள்ளது. வாருங்கள், அதை இங்கு நாம் காணலாம்.


76ஆவது தினமா... 77ஆவது தினமா!


2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, 1947இல் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்தியா தனது 76வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும். இருப்பினும், இது உண்மையிலேயே 76ஆவது சுதந்திர ஆண்டா அல்லது 77ஆவது சுதந்திர ஆண்டா என்ற கேள்வி எழுகிறது. அதாவது, சுதந்திர தினம் வரும்போதெல்லாம் பலருக்கும் இந்த குழப்பம் ஏற்படுவது வழக்கம் தான்.


1948ஆம் ஆண்டு அதன் தொடக்க சுதந்திர தினத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதே தேதியில் நாடு பாரம்பரியமாக அதன் சுதந்திர தினத்தை அனுசரிக்கிறது. இந்த ஆண்டு, இந்தியர்கள் தங்கள் தேசத்தின் 76ஆவது ஆண்டு விடுதலையை கொண்டாடுகிறார்கள்.


இருப்பினும் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15இன் வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்ளும்போது ஒரு மாற்றுக் கண்ணோட்டமும் இங்கு எழுப்பப்படுகிறது. இது பல நூற்றாண்டு காலனிய ஆதிக்கத்தில் இருந்து இந்தியா வெளிவந்த தருணம் ஆகும். இந்தக் கண்ணோட்டத்தின்படி, 1947ஆம் ஆண்டு சுதந்திரத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, அதை முதல் சுதந்திர தினமாக ஆக்குகிறது. இப்படியாக, 2023ஆம் ஆண்டாக மாறும்போது, இந்தியா தனது 77வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடத் தயாராகிறது எனலாம்.


2023ஆம் ஆண்டில், இந்தியா தனது 77ஆவது சுதந்திர தினத்தையும், சுதந்திரத்தின் 76ஆவது ஆண்டையும் நினைவுகூரும் என்பதையே நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் மையப்புள்ளியானது பரந்த "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" விழாக்களின் ஒருங்கிணைந்த அங்கமாக "தேசமே தலையாயது, எப்போதும் அதுவே" என்ற கருப்பொருளாகும்.


மேலும் படிக்க | பிரதமர் மோடி ஜோக் அடிப்பது சரியானதல்ல... ராகுல் காந்தி காட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ