சவுதி அரேபியா இளவரசர் வருகையால் இரு நாடுகளுக்கும் இடையில் 5 முக்கிய ஒப்பந்தங்கள்
இரு நாடுகளுக்கும் இடையில் ஐந்து முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன
புதுடில்லி: அரசு முறை பயணமாக நேற்று இரவு இந்தியா வந்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் சவுதி இளவரசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் இளவரசர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையில் ஐந்து முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன. இந்த ஒப்பந்தம் குறிப்பாக முதலீடு, எரிசக்தி, சுற்றுலா மற்றும் வியாபார துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது என கூறப்பட்டு உள்ளது.
அதன் பின்னர் ஊடகங்களில் உரையாற்றி பிரதமர் மோடி,
இன்று, நாங்கள் இருவரும் எங்கள் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் பற்றி விவாதித்தோம். சவுதி அரேபியா எங்கள் மதிப்புமிக்க பங்குதாரர் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். இரு நாடுகளுக்கும் பல ஆண்டுகளாக உறவு இருப்பதாக அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் ஏற்கனவே பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் சவூதி அரேபியா பங்கேற்றுள்தை நான் வரவேற்கிறேன். இந்த பிராந்தியத்தை உலகெங்கிலும் முன்னணியில் கொண்டு வருவதற்கான நேரம் வந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இளவரசர் முகமது பின் சல்மான் விஜயம் நாட்டின் உறவுகளின் விரைவான வளர்ச்சிக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது எனவும் பிரதமர் கூறினார்.