உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவை சேர்ந்த WORLD POPULATION REVIEW  என்ற தனியார் நிறுவனம் இது தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்., 


இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை விட இந்தியப் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் 2 புள்ளி 94 டிரில்லியன் டாலர் என்ற ஒட்டுமொத்த ஜிடிபியுடன், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, உலகிலேயே 5வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 


இதே நேரத்தில் இங்கிலாந்தின் பொருளாதார அளவு 2 புள்ளி 83 டிரில்லியன் டாலராகவும், பிரான்சின் பொருளதார அளவு 2 புள்ளி 71 டிரில்லியன் டாலராகவும் இருப்பதை அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.


இந்திய மக்களின் வாங்கும் திறன் 10 புள்ளி 51 டிரில்லியன் டாலராக ஆக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அந்த நிறுவம் இந்த அளவுகோல் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விட அதிகம் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


1990களின் தொடக்கத்தில் கொண்டு வரப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கை மற்றும் அன்னிய முதலீடு தொடர்பான கட்டுப்பாடுகள் குறைப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகளால் தான் இந்தியாவின் இந்த பொருளாதார வளர்ச்சி சாத்தியமானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.