ரஷியாவிடம் இருந்து எஸ்-400 வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை சுமார் ரூ.40 ஆயிரம் கோடிக்கு வாங்க இந்தியா திட்டமிடப்பட்டுள்ளது. இதுக்குறித்து கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவாரத்தை நடைபெற்று வந்தது. இந்த பேச்சுவாரத்தை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் ரஷியாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதிக்க வாய்ப்பு ஏற்ப்படலாம் என எச்சரித்துள்ளது. இதனால் இந்தியா மற்றும் ரஷ்யா உறவில் பாதிப்பு ஏற்படுமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியா மற்றும் ரஷ்யா உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பாதிப்பை ஏற்ப்படுத்த அமெரிக்காவை மத்திய அரசு அனுமதிக்காது எனக் கூறினார். 


தார்[தற்போது ரஷ்யா மீது அமெரிக்கா பல பொருளாதார தடை விதித்த்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்காவால் தடை விதிக்க முடியும். இந்த அடிப்படையில் ரஷியாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதிக்க வாய்ப்பு இருக்கிறது.