S Jaishankar: சீனாவுடனான உறவை தீர்மானிப்பது எது? வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
சீனாவுடனான உறவை, இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையே வரையறுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து
புதுடெல்லி: சீனாவுடனான உறவை, இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையே வரையறுக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
இந்தியாவுடனான எல்லை ஒப்பந்தங்களை மீறிய பிறகு, சீனாவுடனான இந்தியாவின் உறவுகள் "மிகவும் கடினமான கட்டத்தை" கடந்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையிலான "எல்லையின் நிலையே உறவின் நிலையை தீர்மானிக்கும்" என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முனிச் பாதுகாப்பு மாநாடு 2022 குழு விவாதத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
ஜெய்சங்கர், முனிச் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference) 2022 குழு விவாதத்தில் உரையாற்றுகையில், சீனாவுடன் இந்தியாவுக்கு சிக்கல் பற்றி அவர் பேசினார்.
மேலும் படிக்க | "எல்லையில் சீனா.. நேருவை சுற்றி வரும் மோடி அரசு" சுற்றி வளைத்த மன்மோகன் சிங்
45 ஆண்டுகளாக அமைதி நிலவியது, நிலையான எல்லை நிர்வாகம் இருந்தது, 1975 முதல் எல்லையில் இராணுவ உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கேட்ட ஒரு கேள்விக்கு எஸ்.ஜெய்சங்கர் பதிலளித்தார்.
அதைத்தொடர்ந்து, சீனாவுடனான உறவுகள் தொடர்பாக பேசிய அமைச்சர், ராணுவப் படைகளை எல்லைக்கு அருகில் கொண்டு வரக்கூடாது என்று சீனாவுடன் ஒப்பந்தங்கள் இருந்தது. ஆனால் உண்மையான கட்டுப்பாட்டுப் பகுதியில் (Line of Actual Control) சீனர்கள் ஒப்பந்தங்களை மீறினார்கள் என்று ஜெய்சங்கர் கூறினார்.
"எல்லையின் நிலை, உறவுகளின் நிலையை தீர்மானிக்கும், அது இயற்கையானது" என்று அவர் கூறினார்.
"எனவே வெளிப்படையாக இப்போது சீனாவுடனான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தில் உள்ளன," என்று வெளியுறவு அமைச்சர் கூறினார், ஜூன் 2020 க்கு முன்புவரை சீனாவுடனான இந்தியாவின் உறவுகள் மிகவும் கண்ணியமாக இருந்தன.
மேலும் படிக்க | பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க கனவுக்கு முற்றுப்புள்ளி
பாங்காங் ஏரிப் பகுதிகளில் வன்முறை மோதலைத் தொடர்ந்து, இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் வெடித்தது மற்றும் இரு தரப்பினரும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் விரைந்ததன் மூலம் படிப்படியாக எல்லைப் பகுதியில் ராணுவ பலத்தை அதிகப்படுத்தினார்கள்.
ஜூன் 15, 2020 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த பயங்கர மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது.
உக்ரைன் தொடர்பாக நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் குறித்து விரிவாக விவாதிக்க நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டின் இந்தோ-பசிபிக் குழு விவாதத்தில் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
மேலும் படிக்க | அலிபாபா உட்பட 54 சீன செயலிகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR