புதுடெல்லி: இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான 9 வது சுற்று பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்துப்படி புதன்கிழமை திட்டமிட்டபடி சீன மற்றும் இந்திய எல்லையில் உள்ள படைகள் பின்வாங்கத் தொடங்கின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராணுவத் தளபதி நிலையிலான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தையின் போது ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. அதையடுத்து, பாங்காங் ஏரியின் (Pangong Lake) தெற்கு மற்றும் வடக்கு கரையில் உள்ள சீன மற்றும் இந்திய எல்லைப் படைகள் புதன்கிழமையன்று அங்கிருந்து வெளியேறத் தொடங்கியதாக சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இராணுவத் தளபதி நிலை பேச்சுவார்த்தையின் ஒன்பதாவது சுற்றின் போது எட்டப்பட்ட ஒருமித்த கருத்துப்படி புதன்கிழமை திட்டமிட்டபடி சீன மற்றும் இந்திய எல்லைப் படைகள் பின்வாங்கத் தொடங்கியதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி குளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


Also Read | வங்கி ஊழியர்களுக்கு மார்ச் மாதம் ஊதிய உயர்வு, DA Hike: மொத்தத்தில் பண மழை


ஜனவரி 24 ம் தேதி மோல்டோ-சுசுல் (Moldo-Chushul) எல்லை தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. சீனா-இந்தியா கார்ப்ஸ் கமாண்டர் லெவல் கூட்டத்தின் ஒன்பதாவது சுற்றின் போது கிழக்கு லடாக்கில் முன்னணி துருப்புக்களை முன்கூட்டியே விலக்கிக் கொள்ள இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டன.  


கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் இருந்து இரு நாடுகளும் மெயான கட்டுப்பாட்டு கோட்டில் (Line of Actual Control (LAC)) தங்கள் துருப்புக்களை நிறுத்தி வைத்துள்ளன. LAC பகுதியில் சீனா பெருமளவில் தனது ராணுவ பலத்தை குவிக்கத் தொடங்கியபோது, இந்தியா அதற்கு தக்க பதிலளித்தது.


தெற்குக் கரையிலிருந்து முதலில் துருப்புக்களையும் பீரங்கிகளையும் திரும்பப் பெறுமாறு இந்தியாவிடம் சீனா கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக, பதற்றம் நிலவும் பகுதிகளில் இருந்து சீனா பின்வாங்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டிருக்கிறது.


ALSO READ: Road Safety World Series T20: சச்சின் முதல் கவாஸ்கர் வரை கிரிக்கெட் ஜாம்பவான்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR