திட்டமிட்டபடி எட்டாவது நிதி பேச்சுவார்த்தை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள அருண் ஜெட்லி இன்று 5 நாள் பயணத்தை தொடங்குகிறார். பெய்ஜிங்கில் நடைபெறும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார். பெய்ஜிங்கில் தங்கும் அருண் ஜெட்லி சீன தொழில் அதிபர்கள் மற்றும் வங்கி நிறுவனங்களை சந்தித்து பேசுகிறார், அப்போது இந்தியாவில் உள்கட்டமைப்பு மற்றும் பிற துறைகளில் முதலீடு செய்ய கேட்டுக் கொள்வார் என்று ஏற்கனவே மத்திய நிதிஅமைச்சகம் தகவல் வெளியிட்டு இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்தியா - சீனா நிதிஅமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்தா தாஸ் கூட்டத்தில் கலந்துக் கொள்ள முடியாது என்பதன் காரணமாக பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது என்று அரசுதரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுவரையில் இந்தியா - சீனா இடையே 7 முறை நிதி பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது, இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு செயலர்களே கலந்துக் கொண்டனர். 8-வது கட்ட பேச்சுவார்த்தையின் போதே இருநாட்டு நிதி அமைச்சர்களும் கலந்துக் கொள்வதாக இருந்தது. 7-வது பேச்சுவார்த்தை கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்றது. 


அருண் ஜெட்லி நிதிமந்திரியாக பதவியேற்ற பின்னர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். என்.எஸ்.சி.இயில் இந்தியா உறுப்பினர் ஆவதை சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, இதுதொடர்பாக  சியோலில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் பேச்சுவார்த்தை ரத்து நிகழ்வு நடந்து உள்ளது குறிப்பிடித்தக்கது.