புதுடெல்லி: இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பூசி செயல்முறையில் இன்று ஒரு புதிய இலக்கு எட்டப்பட்டுள்ளது, வியாழக்கிழமை (அக்டோபர் 21) அதிகாலை உள்ள நிலவரப்படி, இந்தியா 100 கோடி கோவிட் -19 தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதனை படைத்துள்ளது. இந்த மைல்கல்லை கொண்டாட அரசு பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ:தமிழகத்தில் வரும் 23ம் தேதி மதுப்பிரியர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்...!


பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு சென்று முன்களப் பளியார்களை சந்தித்தார். கோவிட் -19 தடுப்பூசி பிரச்சாரத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் இந்த செயல்முறையில் உள்ள மற்றவர்கள் இன்று கவுரவிக்கப்படுவார்கள்.



பாஜக தலைவர் ஜேபி நட்டா, 100 கோடி தடுப்பூசிகள் என்ற மைல்கல்லைக் குறிக்க, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் சில நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.



கோவிட் தடுப்பூசி (Vaccination) குறித்த மத்திய அமைச்சரவை கூட்டம் மற்றும் அமைச்சர்கள் கூட்டம் இன்று நடக்கவுள்ளது.


புது தில்லியின் ஜய்ஜார் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் (NCI), இன்போசிஸ் அறக்கட்டளை ஏற்படுத்திய 806 படுக்கைகள் கொண்ட விஸ்ரம் சதனை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்து வைக்கிறார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.


ALSO READ: அடுத்த 3 மாதங்களுக்கு கவனம் தேவை: எச்சரிக்கும் சுகாதாரச் செயலர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR