சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் விலகிக்கொண்டதை அடுத்து அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு இயங்கி வந்த குர்துக்களும் வெளியேறி வருகின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத்தொடர்ந்து சிரியாவின் மீது துருக்கி, ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் ராணுவ நடவடிக்கை சிரியாவின் நிலப்பரப்பின் ஒருங்கிணைப்பையும் இறையாண்மையையும் மதிக்கும் விதத்தில் அமைய வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை விடுத்துள்ளது.


சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் துருக்கி இராணுவம் தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. இது  தொடர்பாக இந்தியா பெரிதும் கவலை கொண்டுள்ளது.  


இராணுவத்தின் நடவடிக்கை காரணமாக சிரியா பகுதியில் ஸ்திரத்தன்மை குறைக்கப்பட வாய்ப்புள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்களுக்கும் பிற துறையினருக்கும் பெரும் நிர்ப்பந்தங்களும் அபாயங்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்திக் குறிப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே சிரியாவில் இருந்த குர்துக்கள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. துருக்கி இன்று நடத்திய ஒரே நாள் தாக்குதலில் 60,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என போர் கண்காணிப்பு குழு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.