இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் டெல்லியில் உள்ள பாக்கிஸ்தான் துணைத் தூதர் அதிகாரிகளை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியா மெகமூத் அக்தருடன் கைது செய்யப்பட்ட மவுலானா ரம்ஜான், சுபாஷ் ஜாங்கிர் ஆகிய இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளனர். இதையடுத்து, மெஹமூத் அக்தரை இந்தியாவில் இருக்கத் தகுதியற்ற நபர் என்று அறிவித்த மத்திய அரசு 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தில்லி காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:


தூதரகத்தில் நுழைவு இசைவு பெற விண்ணிப்பிக்கும் ஏழ்மையான இந்தியர்களிடம் பண ஆசை காட்டி, தனது உளவுப் பணிகளுக்கு மெஹமூத் அக்தர் அவர்களைப் பயன்படுத்தியுள்ளார். மெஹபூப் ராஜ்புத் என்ற பெயரில் போலியாக ஆதார் அட்டையைத் தயாரித்து இந்தியக் குடிமகன் போல அவர் உலவி வந்துள்ளார். தில்லியில் உள்ள சாந்தினி செளக் பகுதியில் வசித்து வந்த மெஹமூத் அக்தருக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த மெளலானா ரம்ஜான், சுபாஷ் ஜாங்கீர் ஆகிய இருவரும் உதவி செய்துள்ளனர். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அக்தர் உளவுப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் உளவாளிகளாக அவர்கள் செயல்படுவது உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அவர்களை போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர். மெஹமூத் அக்தரிடம் இருந்து பாதுகாப்புத் துறை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இந்த விவகாரத்தில் மேலும் சில பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 


இதனிடையே, உளவாளியாகச் செயல்பட்ட மெஹமூத் அக்தரை இந்தியாவில் இருக்கத் தகுதியற்ற நபர் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளார்.