Ladakh-ல் வலுவாக கால் ஊன்றியுள்ள இந்திய ராணுவம்.. அஞ்சி நடுங்கும் சீனா...!!!
இந்தியா, புதிதாக 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய நிலையில், இந்திய சீன பகுதியில் இப்போது இந்திய ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. சீன இராணுவத்தின் அசைவுகளை இந்தியா துல்லியமாக கண்காணித்து வருகிறது.
புதுடெல்லி (New Delhi) : இந்தியா-சீனா எல்லையில் (India china Border) பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் மீண்டும் தங்கள் நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த முறை, இந்திய ராணுவ வீரர்கள் 6 புதிய சிகரங்களை கைப்பற்றியுள்ளனர். இது சீன இராணுவத்திற்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்த சிகரங்கள் லடாக்கின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ளன.
இந்தியா, புதிதாக 6 புதிய சிகரங்களை கைப்பற்றிய நிலையில், இந்திய சீன பகுதியில் இப்போது இந்திய ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. சீன இராணுவத்தின் அசைவுகளை இந்தியா துல்லியமாக கண்காணித்து வருகிறது.
இந்திய இராணுவ வீரர்கள் இந்த சிகரங்களை ஆக்கிரமித்ததிலிருந்து, சீன வீரர்கள் இந்திய வீரர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க எல்லையை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ரஃபேல், மிராஜ் மற்றும் சுகோய் போர் விமானங்கள் முன்னெச்சரிக்கையாக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | சண்டை போட்டு ஜெயிக்க முடியலை.. பாட்டு பாடியாவது ட்ரை பண்ணலாம் என்கிறது சீன படை..!!!
இந்திய விமானப்படை 24 மணி நேர எச்சரிக்கை நிலையில் பணியாற்றி வருகிறது. ஏனெனில் இந்த முறை இந்திய ராணுவம் எதிரிக்கு எந்த வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை. ஆகஸ்ட் 29-30 இரவு, சீனத் துருப்புக்கள் பாங்காங் ஏரியின் தெற்குப் பகுதியில் உள்ள ப்ளாக் டாப் மலைகளைக் கைப்பற்ற முயற்சித்தார்கள். ஆனால் சீன வீரர்களின் நரி தந்திரத்தை இராணுவ வீரர்கள் முறியடித்தனர்.
கல்வான் (Galwan valley) பகுதியில் ஜூன் மாதம் சீனா நடத்திய தாக்குதலை அடுத்து, அடுத்த அடுத்த நிகழ்வுகளில் சீனாவின் தந்திர நடவடிக்கைகளை முறியடித்து தொடர்ந்து இந்தியா வலுவான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வட கொரிய வரலாறு முக்கியம் அமைச்சரே... பாசமலர் தங்கையின் அதிரடி உத்தரவு..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR