DRDO 2-DG: கொரோனா சிகிச்சையில் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது
டாக்டர் ரெட்டீஸ் (Dr.Reddy`s) ஆய்வகங்களுடன் இணைந்து டிஆர்டிஓ (DRDO) உருவாக்கிய கொரோனாவிற்கான புதிய மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-deoxy-D-glucose (2-DG) ) அவசர கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ள நிலையில், ஆறுதல் அளிக்கும் விஷயமாக, கடந்த 8ம் தேதி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு கொரோனா மருந்து ஒன்றின் பயன்பட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கொரோனா சிகிச்சையில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் (Remdesivir) மட்டுமே பெரிதும் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் (Dr.Reddy's) ஆய்வகங்களுடன் இணைந்து டிஆர்டிஓ (DRDO) உருவாக்கிய கொரோனாவிற்கான புதிய மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-deoxy-D-glucose (2-DG) ) அவசர கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பவுடர் வடிவில் ஒரு சாக்கெட்டில் வருகிறது, இது தண்ணீரில் கரைந்து வாய்வழியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
மருந்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட போது, கொரோனா (Corona Virus) நோயாளிகள், மருத்துவ ஆக்ஸிஜன் தேவை ஏதும் இல்லாமல் விரைவில் குணமாகினர் என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் (Rajnath Singh) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் (Harsh Vardhan) ஆகியோர் கூட்டாக வெளியிடுகின்றனர். வெளியிடுவதற்கு தாயார் நிலையில் 10,000 பாக்கெட்டுகள் உள்ளன.
இந்த மருந்து வேலை செய்யும் முறை
"2-டி.ஜி.மருந்தின் மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் வைரஸ் பல்கி பெருகுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
கோவிட் சிகிச்சையில் 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
COVID-19 இரண்டாவது அலையின் போது, ஏராளமான நோயாளிகளுக்கு, ஆக்ஸிஜன் அளவு குறைந்து, ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மருந்து நோயாளியை விரைவில் குணப்படுத்தி, அவர் உடல் நிலை மோசமாகும் வாய்ப்பைய குறைப்பதோடு, அவருக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்படுவதோடு, COVID-19 விரைவில் குணமாகும் நிலை ஏற்படுதால், படுக்கை பற்றாக்குறை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் தீரும் என நம்பப்படுகிறது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாக டிஆர்டிஓவின் கொரோனாவிற்கு எதிரான மருந்தான, 2 டிஜி (2-DG) மே 17 முதல் நோயாளிகளுக்கு கிடைக்கும். திங்களன்று, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இந்த மருந்தின் முதல் தொகுதியை வெளியிடுவார்கள் என அரசு கூறியுள்ளது. பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தின் அதிகார பூர்வ ட்விட்டர் கணக்கிலும், நேற்று இரவு ட்வீட் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | GOOD NEWS! DRDO-வின் 2-deoxy-D-glucose கொரோனா மருந்தின் பயன்பாட்டிற்கு DCGI ஒப்புதல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR