தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார் பிரதமர் மோடி..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற சவாஸ்தி பிஎம் மோடி எனும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை அவர் வெளியிட்டார். மேலும் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினத்தையொட்டி நினைவு நாணயத்தையும் மோடி வெளியிட்டார்.


இதையடுத்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் பேசிய மோடி வணக்கம் என்று கூறி தமிழில் உரையை தொடங்கினார். இந்தியா-தாய்லாந்து இடையே நிலவும் சிறந்த நட்புறவை கண்டு தாம் மிகவும் பெருமைப்படுவதாக அவர் தெரிவித்தார். நான் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தாய்லாந்து வந்தேன். அப்போது எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இந்தியா தாய்லாந்து இடையே ஆழமான உறவு உள்ளது. இருநாடுகளும் பொதுவான சிந்தனை உடையவை.



தாய்லாந்தில் இருப்பது தமது சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தருவதாகவும், இந்தியாவுடன் தாய்லாந்து அரச குடும்பத்தினருக்கு இருக்கும் உறவு, இருநாடுகள் இடையேயான வரலாற்று ரீதியிலான உறவுகளையும், ஆழ்ந்த நட்புறவையும் வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 130 கோடி இந்தியர்கள் ஓன்று சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருவோம். இந்தியாவின் வளர்ச்சிக்காக மக்கள் என்னை மீண்டும் பிரதமராக்கி உள்ளனர். 2019 தேர்தலில் 60 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். அதில் அதிக பெண்கள் ஓட்டளித்துள்ளனர், இது வரலாற்று சிறப்பு மிக்கது. ஒருசிலர் நான் பிரதமர் ஆக விரும்பவில்லை, இருப்பினும் யார் நாட்டுக்காக உழைப்பவர்கள் என்று அறிந்த பெரும்பாலானோர் என்னை பிரதமராக்கி உள்ளனர். காஷ்மீரில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இது இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர பாடுபடுவோம்.



மேலும், மொழியின் அடிப்படையில் மட்டுமல்லாமல், உணர்வுகள் அடிப்படையிலும் இந்தியாவும், தாய்லாந்தும் ஒன்றே என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, நாளை நடைபெறும் ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையேயான விரிவான பொருளாதார கூட்டை ஏற்படுத்துவது தொடர்பான உச்சி மாநாடும், 14ஆவது கிழக்காசிய உச்சி மாநாடும் வரும் 4 ஆம் தேதி நடைபெறும் உச்சி மாநாடுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.