மொத்தமாக முடங்கும் அமெரிக்கா... அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்... திடீரென என்னாச்சு?

US Government Shutdown: வரும் டிச.25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று நள்ளிரவு முதல் அமெரிக்க ஃபெடரல் அரசு முழுவதுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Dec 20, 2024, 04:55 PM IST
  • அமெரிக்கா அரசு கடன் வாங்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை.
  • அந்த வகையில், கடன் வாங்குவதற்கான மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை.
  • இதனால், அமெரிக்க ஃபெடரல் அரசு மொத்தமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மொத்தமாக முடங்கும் அமெரிக்கா... அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்... திடீரென என்னாச்சு? title=

US Federal Government Shutdown Latest News Updates: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெடரல் அரசுக்கு நிதியளிக்கும், செலவின மசோதா பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது உறுப்பினர்களால் நிறைவேற்றப்படாத காரணத்தால் ஃபெடரல் அரசு முழுவதுமாக முடங்க வாய்ப்புள்ளது. ஃபெடரல் அரசுக்கும், ஃபெடரல் அரசின் அமைப்புகளுக்கும் நிதி அளிக்கும் எமர்ஜென்சி திட்டத்தை இன்று நள்ளிரவுக்குள் கண்டறிந்து செயல்படுத்தாவிட்டால் ஃபெடரல் அரசு ஷட்டவுண் ஆகும். ஃபெடரல் அரசு ஷட்டவுண் என்றால் என்ன, அதனால் அமெரிக்காவில் என்ன தாக்கம் ஏற்படும் என்பதை இங்கு காணலாம்.

ஃபெடரல் அரசு மொத்தமாக முடங்கினால் பல்லாயிரக்கணக்கான ஃபெடரல் ஊழியர்கள் எவ்வித சம்பளமும் கொடுக்காமல் கட்டாய விடுப்பில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகை வேறு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஃபெடரல் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி அங்கு பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் தற்போது குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்வாகி உள்ளார். டிரம்ப் வரும் முதல் இரண்டு ஆண்டுகள் ஆட்சியை நடத்துவதற்கு (2027 ஜனவரி வரை), அரசின் செலவினங்களுக்காக கடன் வாங்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை.

டிரம்பிற்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு

அந்த வகையில், டிரம்பின் ஆதரவோடு இந்த மசோதா அமெரிக்காவின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு டிரம்ப் சொந்த கட்சி உறுப்பினர்களே அதாவது குடியரசு கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதாவை நிறைவேற்ற இயலவில்லை. டிரம்பின் ஆதரவு பெற்ற இந்த மசோதாவுக்கு ஆதரவாக 174 வாக்குகளும், எதிர்த்து 235 வாக்குகளும் பதிவாகி உள்ளன. நம் நாட்டில் ஒரு கட்சி முடிவு செய்தால் அதன் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மாதிரி வாக்களிக்க வேண்டும், ஆனால் அமெரிக்காவில் அப்படியல்ல. ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் முடிவுக்கு ஏற்ப வாக்களிக்கலாம்.

மேலும் படிக்க | 1000 பேருடன் உடலுறவு... அதுவும் ஒரே நாளில்... சாதனைக்கு தயாராகும் 23 வயது இளம்பெண்!

நள்ளிரவு முதல் ஷட்டவுன்?

அரசின் செலவினங்களை குறைக்க வேண்டும் என்பது குடியரசு கட்சியினர் தொடர்ச்சியாக முன்வைத்து வரும் கோரிக்கையாகும். அந்த வகையில், டிரம்பே அதிகமாக அரசு செலவினங்களுக்கு கடன் வாங்கும் வகையில் தீர்மானம் கொண்டுவந்திருப்பது குடியரசு கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான், குடியரசு கட்சியினரே டொனால்ட் டிரம்ப் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் ஃபெடரல் அரசுக்கும், அதன் அமைப்புகளுக்கும் நிதி கிடைக்காது. இதனால், ஃபெடரல் அரசு மொத்தமாக முடங்கும். எனவே, இன்று நள்ளிரவுக்குள் நாடாளுமன்றம் ஃபெடரல் அரசுக்கு நிதியளிக்கக் கூடிய தீர்வை கண்டறியாவிட்டால், இன்று நள்ளிரவு 12.01 மணி முதல் ஃபெடரல் அரசு ஷட்டவுன் உறுதியாகும். அடுத்த 2 நாள்கள் வார இறுதி நாள்கள் என்பதால் இந்த ஷட்டவுனின் தாக்கம் பெரிதாக இருக்காது என்றும் வரும் திங்கட்கிழமை முதல் அதன் உண்மையான தாக்கம் மக்களுக்கு தெரியவரும் என்றும் பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.

லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு பாதிப்பு

இதனால், ஃபெடரல் அரசின் சுமார் 8 லட்சத்து 75 ஆயிரம் ஊழியர்கள் எவ்வித சம்பளமும் கொடுக்கப்படாமல் கட்டாய விடுப்பு எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இருப்பினும் சுமார் 14 லட்சம் அத்தியாவசிய ஊழியர்கள் பணியில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதாவது, ஃபெடரல் அரசின் கீழ் இருக்கும் எல்லை கண்காணிப்பு படை, கடல் பாதுகாப்பு படை, ஃபெடரல் புலனாய்வு பிரிவு ஆகியவை இயங்கும். அதேபோல், போக்குவரத்து சார்ந்த பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகளும் பணியில் தொடர்வார்கள். மேலும், மருத்துவமனைகளும் எவ்வித தடங்கலும் இன்றி இயங்கும்.

ஆனால், மறுபுறம் ஃபெடரல் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நினைவுச் சின்னங்கள், தேசிய பூங்காக்கள் போன்ற சுற்றுலா தலங்கள் மூடப்படும். குற்றவியல் வழக்குகள் தொடரும். ஆனால், சிவில் வழக்குகளின் விசாரணை இடைநிறுத்தப்படும் என்பதால் நீதிமன்ற அமைப்புகளும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றில் நீண்ட ஷட்டவுன்

1980ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை மொத்தம் 10 முறை ஃபெடரல் அரசு மொத்தமாக முடங்கியிருக்கிறது. ஆனால், அவற்றில் பெரும்பாலான முறை ஓரிரு நாள்கள் முதல் ஒரு வாரத்திற்குள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இருப்பினும், கடந்த 2018-19ஆம் ஆண்டில் சுமார் 35 நாள்கள் வரை ஃபெடரல் அரசு ஷட்டவுன் ஆனது. இதுதான் அமெரிக்க வரலாற்றில் நடந்த ஃபெடரல் அரசின் நீண்ட ஷட்டவுன் ஆகும். மேலும் இது கடைசியாக ஏற்பபட்ட ஷட்டவுன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உடலுறவும் இல்லை... பார்த்தது கூட இல்லை - ஆனால் குழந்தை பெற்ற 2 கைதிகள் - டேய் எப்புட்றா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News