புது தில்லி: நாட்டின் பல மாநிலங்களில் இருந்து "சோதனை கருவிகள்" சரியாக செயல்படவில்லை என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த சோதனை கருவிகள் தவறான அறிக்கைகளை அளிக்கின்றன. இதன் காரணமாக மருத்துவர்களுக்கு அதிக சிக்கல் உள்ளது. துல்லியமான நிலவரம் தெரிந்துக்கொள்வதில் பிரச்சினை உள்ளது என்று கூறியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது இது தொடர்பாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சோதனை கருவிகள் அந்தந்த நாடுகளுக்கு திருப்பித் தரப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். 


மேலும் பேசிய அவர், சீனாவின் சோதனைக் கருவி குறித்த குற்றச்சாட்டு இந்தியா மட்டுமல்ல. உலகின் பல நாடுகள் சீனப் பொருட்கள் தரமற்றவை என்று கூறியுள்ளன. 


அதில் ஒன்று பெண்கள் உள்ளாடைகளால் செய்யப்பட்ட முகமூடிகளை சீனா தனது "நெருங்கிய நண்பர்" பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


சீனாவிலிருந்து இந்தியாவுக்கு கொரோனா சோதனைக் கருவி அனுப்பப்பட்டது. ஆனால் கொரோனா நோய்த்தொற்றை ஆய்வு செய்வதில் இது இந்திய தரத்தை பூர்த்தி செய்யவில்லை. இதன் காரணமாக அந்த கருவிகள் திருப்பித் தரப்பட உள்ளது. இந்த சோதனை கருவிக்காக இதுவரை சீனாவுக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார். 


இந்த கருவிகளின் முடிவுகள் குறித்து பல மாநிலங்களில் இருந்து புகார்கள் வந்தன. சுகாதார அமைச்சரான அஸ்வினி சவுபே அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். அதில் அவர் குறைபாடுள்ள ஆன்டிபாடி சோதனைக் கருவிகள் அனைத்தும் திருப்பித் தரப்படும் என்று கூறினார். நிச்சயமாக, அவை சீனா உட்பட எந்த நாட்டிலிருந்தும் வாங்கப்பட்டிருந்தாலும் அது திருப்பி அனுப்பப்படும். நாங்கள் இதுவரை ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை என்று விளக்கம் அளித்தார். 


மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மாநில சுகாதார அமைச்சர்களுடன் உரையாடினார். அவர் கூறினார், "தேவையான போதெல்லாம் நாங்கள் உங்களுக்கு உதவ எங்கள் மூத்த அதிகாரிகளை அனுப்புவோம். உங்களுக்கு ஆதரவளிக்க அவர்கள் இருக்கிறார்கள். இதன்மூலம் உங்களுக்கு மேலும் உதவவும் முடியும், சோதனை கருவி குறித்து விவரத்தையும் பெறலாம் என்றார்.


கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு நாடும் முழு சக்தியுடன் ஈடுபட்டுள்ளது. கொரோனாவை வெல்ல இந்தியாவில் சோதனை கருவிகளை பயன்படுத்த இந்தியா உத்தரவிட்டது. ஆனால் கிட்டின் தரம் கேள்விக்குறியாக இருந்ததால், இந்த கருவி தொடர்பான சோதனையை அடுத்த இரண்டு நாட்களுக்கு நிறுத்துமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. அதன் பிறகு அனைத்து மாநிலங்களும் இரண்டு நாட்களாக சோதனை கருவி மூலம் மேற்கொள்ளப்படும் பரிசோதனையை நிறுத்தியுள்ளன.


இந்த கருவிகள் தொடர்பாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உட்பட அனைத்து மாநிலங்களிலிருந்தும் புகார்கள் வந்தன. உண்மையில், சீன சோதனைக் கருவிகளைக் குறித்து பல சந்தேகங்கள் எழுந்ததால் ஐரோப்பா ஏற்கனவே இதை தடை செய்துள்ளது. இந்த சோதனை கரிவியின் முடிவுகள் நம்பத்தகுந்ததாக இல்லாததால் ஐரோப்பிய நாடுகள் 2 மில்லியன் கிட்களை சீனாவுக்கு திருப்பி அனுப்பியிருந்தன. 


ஒரு மாதத்திற்குப் பிறகு, சீனா அதே கருவியை இந்தியாவுக்கு அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் இந்த விவகாரம் குறித்து விசாரணை விரிவுபடுத்தப்பட்டு உள்ளதால், இந்த கருவிகள் திருப்பி அனுப்பப்படும் என்று மத்திய அரசு இப்போது முடிவு செய்துள்ளது.