இலங்கையுடன்Currency Swap எனப்படும் நாணய மாற்றத்தை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த முடிவிற்காக, பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜூலை 27 ம் தேதி, பிரதமர் மோடியை பாராட்டினார். இந்தியாவின் உதவி இலங்கையில் உள்ள இறுக்கத்தை சற்று தளர்த்தும் என்றும் அதற்கு இலங்கை முழுவதும் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் என்றும் அவர் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 24, வெள்ளிக்கிழமை, இலங்கை இந்தியாவின் ரிசர்வ் வங்கியுடன் (RBI) 400 மில்லியன் டாலர் நாணய இடமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில், தங்களது குறுகிய கால சர்வதேச பணப்புழக்கத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, இலங்கைக்கு (Sri Lanka) இந்த உதவி தேவைப்பட்டது.


RBI-ன் இந்த நடவடிக்கை, கடன் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டத்தை உருவாக்குவது குறித்து ஜூலை 22 அன்று நடந்த தொடர்ச்சியான இருதரப்பு தொழில்நுட்ப விவாதங்களைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், இது, இலங்கையின் COVID மீட்பு நாட்களில் நிவாரண நடவடிக்கைகளில் உதவும் என்றும் கூறியுள்ளது.


இந்த சைகை இலங்கையுடனான பரஸ்பர மரியாதைக்குரிய உறவைப் பேணுவதில் இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும், கோவிட் -19 க்குப் பிந்தைய பொருளாதார மீட்புக் காலத்தில் இந்தியாவும் இலங்கையும் நெருக்கமாக செயல்படும் என்றும் இந்திய தூதரகம் விளக்கியது.


மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, இலங்கையின் கடன் தொல்லைகளின் மரபு பிரச்சினை குறித்து பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டும் என தான் ஆலோசனை வழங்கியதாகவும் குறிப்பிட்டார். இந்தியா சரியான நேரத்தில் செய்யும் உதவி இலங்கை மக்களால் பெரிதும் பாராட்டப்படும் என்றும் அவர் கூறினார்.



இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற இந்திய தூதுக்குழுவில் வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) மற்றும் EXIM வங்கியின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர். வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பேச்சுவார்த்தை நடந்தது.


முன்னதாக, பிரதமர் மோடி அவர்கள் இலங்கை அதிபர் கோதாபயா ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோருடன் முறையே மே 23 மற்றும் மே 27 ஆகிய தேதிகளில் தொலைபேசியில் தொடர்புகொண்டு, Covid-19 தொற்றுநோயால் இலங்கையின் மக்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார்.



தொற்றுநோயின் விளைவுகளைத் தணிக்க தேவையான அனைத்து ஆதரவையும் இந்தியா வழங்கும் என்றும், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மற்றும் பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து ஒன்றுபட்டு செயல்படும் என்றும் பிரதமர் மோடி இலங்கை அதிபர் மற்றும் பிரதமருக்கு உறுதியளித்தார்.


ALSO READ: உதவிக்கரம் நீட்டும் இந்தியா: வட கொரியாவுக்கு 1 மில்லியன் டாலர் மருத்துவ உதவி!!