அமெரிக்காவின் 30 பொருட்களுக்கு கூடுதல் சுங்கவரியை விதிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரஇக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசங்கர வாகனங்கள், ஆப்பிள், பாதாம் உள்ளிட்ட 30 பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரியை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. முன்னதாக அமெரிக்காவில், அதிபர் ட்ரம்ப் சீன பொருட்களின் மீதான வரியை உயர்த்தினார். இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் துவங்கியது.


இதற்கிடையில் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் உருக்குக்கு 25%, அலுமினியத்துக்கு 10% கூடுதலாக  வரி விதிப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா அறிவித்தது.


இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கான வரியை உயர்த்த இந்தியா முடிவெடுத்துள்ளது.



அதன்படி 800CC-க்கு அதிமான எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் பைக்குக்கு 50%, பாதாம், வால்நட்டுக்கு 20% ஆப்பிளுக்கு 25%, உள்பட 30 பொருட்களுக்கான வரி விதிக்கப்படவுள்ளது. அமெரிக்காவுக்கு அளித்து வந்த இச்சலுகைகளை நிறுத்திக்கொள்வதன் மூலம் இந்தியாவிற்கு 238.09 மில்லியன் டாலர் வசூலாகும் என உலக வர்த்தக நிறுவனத்திடம் இந்தியா தெரிவித்துள்ளது.


மேலும், இந்தியாவின் உருக்கு அலுமினியத்துக்கு அமெரிக்கா விதித்த வரியை நீக்கும் வரை இந்த வரி விதிப்பு அமலில் இருக்கும் இந்த கூட்டு வரி நடைமுறையில் இருக்கும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.


தற்போது, மத்திய அரசு எடுத்துள்ள சுங்க வரி உயர்வு பற்றிய தகவலை உலக வர்த்தக அமைப்பிடம் பட்டியலாக தாக்கல் செய்து உள்ளது.


1994–ம் ஆண்டு உலக நாடுகள் இடையே செய்துகொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி உலகளாவிய வர்த்தகம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள்  உலக வர்த்தக அமைப்பிடம் தெரிவிக்கப்படவேண்டும், அதன்படி இந்தியா தன்னுடைய பட்டியலை தற்போது தாக்கல் செய்து உள்ளது.