இரண்டு நாள் சுற்று பயணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக ஈரான் சென்றுள்ளார். நேற்று ஈரான் தலைநகர் தெஹ்ரான் சென்றடைந்தார். அங்கு இரு நாட்டு வர்த்தகம், எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை பற்றி பேச்சு வார்த்தை நடத்தப்படும் என கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் வாஜ்பாய் பிறகு ஈரான் செல்லும் 2வது பிரதமர் நரேந்திர மோடி ஆவார். சாப்ஹார் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆனால் கடல் மார்க்கமாக ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்தை இந்தியா நேரடியாக அதிகரிக்க முடியும். மேலும் இந்த ஒப்பந்தத்தால் ஈரானில் இந்தியா கால் பதிக்கும். எந்த ஒரு பொருளையும் ஈரானுக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும், ஒரு தடையற்ற வர்த்தகம் ஏற்படும். 


இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
சபஹார் துறைமுக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் பெரிய சின்னம் ஆகும். இந்தியா- ஆப்கானை இணைப்பதில் சபஹார் துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த துறைமுகத்தை மேம்படுத்த 500 மில்லியன் டாலர் வழங்குவது இரு நாட்டு உறவில் முக்கியமான மைல்கல். இந்தியாவும் ஈரானும் புதிய நண்பர்கள் அல்ல. வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று முதல் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய பரிமாற்றம் ஏற்படும். மேலும் பயங்கரவாதம், போதை மருந்து கடத்தல் ஆகியவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.