மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம், மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றும் வானொலி உரை மன் கி பாத் நிகழ்ச்சியில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியின் உரையாற்றினார். அப்போது அவர்:-


இளைஞர்கள் புதிய திறன்களை வளர்த்துக் கொள்வதுடன் புதிய மொழியையும் கற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர மனதின் குரல் உரையில் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 


பணப் பரிமாற்றத்துக்காக பீம் செயலியை பயன்படுத்துவதுடன் மற்றவர்க்கும் கற்றுத்தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.  


சமூக ஒற்றுமைக்கான உத்வேகத்தை ராமானுஜரிடம் இருந்து இளைஞர்கள் கற்றுக் கொள்ள வலியுறுத்தியுள்ளார். 


முக்கிய பிரமுகர்களை விட (விஐபி) ஒவ்வொரு மனிதரும் (இபிஐ) முக்கியமானவர்கள் என்றும் மோடி கூறியுள்ளார். 


சிவப்பு சைரன் கலாச்சாரம் மக்களிடம் இருந்து தலைவர்களை தனிமைப்படுத்துகிறது என்று பிரதமர் மோடி கூறினார். மன் கி பாத் உரை பற்றி ஆலோசனைகள், கருத்துகள் பற்றி விரிவாக ஆராயப்படும் என அவர் கூறியுள்ளார். 


கோடையில் வீடு தேடிவரும் அஞ்சல்காரர், பால்காராகளுக்கு தண்ணீர் கொடுங்கள் என மோடி கூறியுள்ளார்.