10 லட்சம் பேருக்கு 19 நீதிபதிகள்... 4.8 கோடி நிலுவை வழக்குகள்... அதிர்ச்சி ரிப்போர்ட்!
செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட இந்திய நீதி அறிக்கை (IJR) 2022 இல் இந்த திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இதில், மக்களுக்கு நீதி வழங்குவதன் அடிப்படையில் மாநில வாரியான தரவரிசையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், நாடு முழுவதும் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 1987-ம் ஆண்டு, சட்ட ஆணையம், வெளியிட்ட தகவலில் 10 லட்சம் பேருக்கு குறைந்தபட்சம் 50 நீதிபதிகள் தேவை என்று கூறியது. இருந்த போதிலும் தற்போது 10 லட்சம் பேருக்கு 19 நீதிபதிகள் என்ற விகிதம் உள்ளது. இதன் காரணமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 4.8 கோடியாக உள்ளது. செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட இந்திய நீதி அறிக்கை (IJR) 2022 இல் இந்த திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இதில், மக்களுக்கு நீதி வழங்குவதன் அடிப்படையில் மாநில வாரியான தரவரிசையும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 18 மாநிலங்களில் கர்நாடகா முதலிடத்திலும், உத்தரபிரதேசம் கடைசி இடத்திலும் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
இந்திய நீதி அறிக்கையில் (IJR) 2022, நாட்டில் நீதி வழங்குவதில் மாநிலங்களில், கர்நாடகா முதலிடத்தில் உள்ளது என்றும் அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் முதல் ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவை என்பது சிறப்பு.
நீதித்துறைக்கான செலவில் டெல்லி முன்னிலையில் உள்ளது
டெல்லி மற்றும் சண்டிகர் தவிர, எந்த மாநிலமும் அல்லது யூனியன் பிரதேசமும் தனது ஆண்டு செலவினத்தில் ஒரு சதவீதத்திற்கு மேல் நீதித்துறைக்கு செலவிடவில்லை. இந்தியா நீதித்துறை அறிக்கையின்படி, நாட்டில் 20,076 நீதிபதிகள் உள்ளனர். ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் 22 சதவீதம் காலியாக உள்ளது. உயர் நீதிமன்றங்களில் 30 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது, 71,224 குடிமக்களுக்கு, துணை நீதிமன்றங்களில் ஒரு நீதிபதியும், 17,65,760 குடிமக்களுக்கு உயர் நீதிமன்றங்களில் ஒரு நீதிபதியும் உள்ளனர். அதே நேரத்தில், மார்ச் 2021 வரை 25 மாநில மனித உரிமை ஆணையங்களில் 33,312 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இங்கும் 44% பணியிடங்கள் காலியாக உள்ளன.
மேலும் படிக்க | NCERT: 10, 11, 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்து சில பாடங்கள் நீக்கம்!
4 வழக்குகளில் 1 வழக்கு 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.
28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உயர் நீதிமன்றங்களில் ஒவ்வொரு நான்கு வழக்குகளில் ஒன்று ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாவட்ட நீதிமன்றங்களிலும் இதே நிலைதான். குறைந்த பட்ஜெட் காரணமாக நீதித்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மட்டும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு முறையான பிரதிநிதித்துவம்
கர்நாடகாவில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி வகுப்பினருக்கு முறையான பிரதிநிதித்துவம் உள்ளது. குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் ஷெட்யூல்ட் இனத்தவர், அருணாச்சல பிரதேசம், தெலுங்கானா மற்றும் உத்தரகாண்டில் ஷெட்யூல்ச் பழங்குடியினர் மற்றும் கேரளா, சிக்கிம், ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில் OBC களின் பிரதிநிதித்துவம் சிறப்பாக உள்ளது. மூன்று வகுப்புகளின் பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீடு எந்த மாநிலத்தின் உதவி மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலும் பூர்த்தி செய்யப்படவில்லை.
தரவரிசையில் வட இந்தியா
காவல்துறை, சிறைகள், நீதித்துறை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றில் மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையில் தரவரிசையில் 10க்கு 3.78 மதிப்பெண்களை உ.பி. பெற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே, உ.பி. பஞ்சாப் 5.10 புள்ளிகளுடன் 12வது இடத்திலும், ஹரியானா 4.79 புள்ளிகளுடன் 13வது இடத்திலும், உத்தரகாண்ட் 14வது இடத்திலும் உள்ளன. 1 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஹிமாச்சல் ஆறாவது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க | இந்திய தேர்தல் நடைமுறையில் முக்கிய சீர்திருத்தம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ