உலக அளவில் பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் ‘Me Too’ என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பிரபலங்கள் தங்கள் அனுபவங்கள், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பதிவு செய்தனர். இந்த பிரச்சாரத்தை அடுத்து பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் குறித்து உலகளாவிய வல்லுனர்கள் கொண்ட குழு கருத்துக்கணிப்பு நடத்தியது.


இந்த கருத்துக்கணிப்பு முடிவில் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு மிகவும் ஆபத்தான முதல் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிரியா மற்றும் அமெரிக்கா மூன்றாமிடத்தில் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் சோமாலியா, சவுதி அரேபியா உள்ளன.