குழந்தைகளை பாதுகாப்பதற்கு இந்தியா கூடுதலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என யுனிசெப் வலியுறுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் யுனிசெப்பின் 70வது ஆண்டு செயல்பாடுகள் நிகழ்ச்சியில் பேசிய இந்திய பிரதிநிதி யாஸ்மின் அலி, இந்தியாவில் ஒவ்வொரு பெண் குழந்தையும் ஆண் குழந்தைக்கு சம உரிமையுடன் வளர்க்கப்பட வேண்டும். குழந்தைகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை அமைக்கவும் இந்தியா மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 


மேலும் இதற்காக ஒரு பேரியக்கம் தொடங்க வேணடிய நேரம் இதுதான். பால்ய கால திருமணம், குழந்தைத் தொழிலாளர் போன்றவற்றியிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் யாஸ்மின் கூறினார்.