இந்தியா வேகமாக வளர வேண்டும் : பிரதமர் மோடி பேச்சு..!
ஒட்டு மொத்த உலகின் பார்வையும் இந்தியாவின் மீது உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்திரகண்ட் மாநிலம் முசூரியில் லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி உள்ளது. இதன் 96வது பொது அறக்கட்டளை வாலிடிக்டரி விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, கொரோனா பெரும் தொற்று உலகத்தையே முழுமையாக முடக்கியுள்ள நிலையில் தற்போது அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டுவர தொடங்கி இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் மொத்தமும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், அதில் இருந்து விரைவில் மீண்டுவர வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், 21ஆம் நூற்றாண்டில் ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியா மீதுதான் உள்ளது எனக்கூறிய பிரதமர் மோடி, இந்தியா துரிதமாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும், நாடு முழுவதிலும் உள்ள அரசு துறை சார்ந்த ஊழியர்கள் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்திற்காக அடுத்த 25 ஆண்டுகள் அவர்களின் முழுமையாள பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் படிக்க | விஜய்யின் அரசியல் சந்திப்பு : திட்டம் என்ன!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR