மலேஷிய பிரதமர் கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு!!
குடியுரிமை சட்டம் குறித்து மலேஷிய பிரதமர் மஹாதீர் முகமது தெரிவித்த கருத்திற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்டம் குறித்து மலேஷிய பிரதமர் மஹாதீர் முகமது தெரிவித்த கருத்திற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதிதாக அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இதுவரை இந்தச் சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன. முன்னதாக இந்த சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தியதில், இரு தரப்பு மக்களும் காயமடைந்ததை அடுத்து டெல்லியில் நடந்த போராட்டம் கசப்பாக மாறியது. ஜாமியா மற்றும் சீலாம்பூர்-ஜாஃபராபாத் வன்முறைகள் மற்றும் ஜாமா மஸ்ஜித் அருகே நடந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக வணிகர்கள் டெல்லிக்கு வருவதை நிறுத்திவிட்டனர். மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 16 காவலர்கள் உட்பட 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தவல்கள் தெரிவிக்கிறது.
டெல்லி செங்கோட்டை அருகே, 144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் திரண்டதால் அங்கு பதற்றம் நிலவியது. மேலும் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. போராட்டங்களுக்கு போலீசார் தடை விதித்த நிலையிலும், போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரி மாணவ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் கோலாலம்பூரில் நடந்த மாநாட்டுக்கு பின்னர் மஹாதீர் முகமது கூறும்போது, 70 ஆண்டுகளாக, இந்தியர்கள் ஒற்றுமையாக வாழும் போது, குடியுரிமை சட்டத்தின், அவசியம் என்ன? எனக்கூறினார்.
இந்நிலையில் குடியுரிமை சட்டம் குறித்து மலேஷிய பிரதமர் மஹாதீர் முகமது தெரிவித்த கருத்திற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம், குடியுரிமை சட்டம் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்த சட்டம், எந்த குடிமகனின், குடியுரிமையை பாதிக்காது என தெரிவித்துள்ளது.