நாட்டின் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான தாக்குதலை தடை செய்வது தொடர்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு 1988 ஆம் ஆண்டு இருநாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, 1991 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இந்த ஒப்பந்தப்படி, இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் அணுசக்தி நிலையங்கள் தொடர்பான தகவலை பரிமாறிக் கொண்டன. இது 31வது பட்டியல் பறிமாற்றம் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ  | ரயில் டிக்கெட் முன்பதிவு; பயணிகளுக்கு செம ஷாக் கொடுத்த ரயில்வே


இதேபோல், கைதிகள் தொடர்பாகவும் இருநாடுகளும் 2008 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, தங்கள் நாட்டு குடிமகன்களை காவலில் வைத்திருக்கும் பட்டியலை இருநாடுகளும் பரஸ்பரம் பறிமாறிக் கொள்ள வேண்டும். அதன்படி, இரு நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் மற்ற நாட்டின் கைதிகள் பட்டியலையும் ஒப்படைத்துள்ளன. 


ALSO READ | ALSO READ | IRCTC உடன் இணைந்து மாதம் ₹80,000 சம்பாதிக்கும் சிறந்த வழி..!!


இந்த கைதிகள் பறிமாற்றப்பட்டியலின் அடிப்படையில், இந்தியாவைச் சேர்ந்த 628 கைதிகள் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். இதில் மீனவர்கள் மட்டும் 577 பேர். எஞ்சியவர்கள் இந்திய பொதுமக்களாவர். இதேபோல், இந்திய அரசு கொடுத்துள்ள பட்டியலில், 355 பாகிஸ்தானியர்கள் இந்திய சிறைகளில் உள்ளனர். அவர்களுள் 73 பேர் மீனவர்கள், 282 பேர் பாகிஸ்தான் குடிமகன்கள் எனக் கூறியுள்ளது. இந்த பட்டியலை ஒப்படைக்கும்போது இந்திய கைதிகளை விரைவில் விடுவிக்குமாறு வலியுறுத்தப்படுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR