ஒமிக்ரானுக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு

இந்தியாவில் ஒமிக்ரானுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், இந்தியாவில் ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழிந்திருப்பதாக தெரிவித்தார். ராஜஸ்தானைச் சேர்ந்த அவருக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. இரண்டு முறை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். இருப்பினும், கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
லவ் அகர்வால் பேசும்போது, " இந்தியாவில் ஒமிக்ரானுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 73. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஒமிக்கிரானால் இருமுறை பாதிக்கப்பட்டுள்ளார். இரண்டு முறையும் சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளது. இருப்பினும் டிசம்பர் 31 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
ALSO READ | அச்சுறுத்தும் கொரோனா; மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
அந்த நபருக்கு நீரிழிவு நோயைத் தவிர உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகியவற்றுடன் கோவிட் நிமோனியா பாதிப்பும் இருந்ததாக உதய்பூர் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி டாக்டர் தினேஷ் கரடி விளக்கமளித்துள்ளார். இறந்த நபருக்கு முதன்முதலாக டிசம்பர் 15 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த முடிவில் அவருக்கு பாசிடிவ் என ரிசல்ட் வந்துள்ளது. மருத்துவனையில் அனுமதிக்கப்படும்போது அவருக்கு காய்ச்சல், இருமல், நாசியழற்சி ஆகியவை இருந்ததாக மருத்துவர் தினேஷ் கரடி கூறியுள்ளார். டிசம்பர் 25 ஆம் தேதி அவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சைக்குப் பிறகும், அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
ALSO READ | ஓமிக்ரானை ஓரங்கட்டி முன்னுக்கு வருகிறது புதிய IHU மாறுபாடு: பிரான்சில் 12 பேர் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 8 நாட்களில் 6.3 மடங்கு கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி, ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அதிகரிக்கும் எண்ணிக்கை கவலைக்குரியது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR