இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 1,024 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தனது மாநாட்டில் சமீபத்திய கோரொனா தோற்றால், 48 வெளிநாட்டினர் உட்பட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1024 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 27 ஆகவும்  உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 106 கொரோனா வைரஸ்கள் சுகாதார சுகாதார இணை செயலாளர் லவ் அகர்வால் உறுதிப்படுத்தினார். மேலும், ஆறு இறப்புகளுடன் வழக்குகள் பதிவாகியுள்ளன. மார்ச் 2 ஆம் தேதி ஐந்தில் இருந்து அடுத்த 27 நாட்களுக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுநோய்களுக்கு இந்தியா தொடர்ந்து கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்துள்ளது.


இதுவரையில் சுமார் 35 ஆயிரம் பேரின் ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 5 நாட்களில் நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் ஒன்றே கால் லட்சம் பெட்டிகளில் ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் சுமார் 182 பேரும், கர்நாடகாவில் 76 பேரும், தெலங்கானாவில் 66 பேரும், உத்தர பிரதேசத்தில் 55 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 


ராஜஸ்தானில் 54 பேரும், குஜராத்தில் 53 பேரும், தமிழகத்தில் 50 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் 39 பேர், பஞ்சாப்பில் 38 பேர், ஹரியானாவில் 3 பெரும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 87 பேர் அதாவது, 10 சதவிகிதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 25 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், துணை ராணுவப்படையினர் தங்களின் ஒருநாள் ஊதியத்தை பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இதன் மொத்த தொகை 116 கோடி ரூபாய்க்கான காசோலையை அதிகாரிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கினர். ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணை அமைச்சர் சுரேஷ் அங்காதி ஆகியோரும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவித்துள்ளனர். ரயில்வே ஊழியர்களின் ஒருநாள் ஊதியத் தொகையையும் சேர்த்து 151 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


இந்த சூழ்நிலையில், ஊரடங்கை மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  விதிகளை மீறுவோரை 14 நாட்கள் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு செல்வதை மாநிலங்கள் தடுக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.