உலக அளவிலான செல்வநிலை மதிப்பீட்டில், இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. இதில் செல்வ செழிப்பான நாடுகளில் அமெரிக்காவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து AfrAsia Bank Global Wealth Migration நடத்திய ஆய்வின் முடிவில், செல்வ செழிப்பான நாடுகளில், 62,584 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 24,803 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் 19, 522 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.


நான்காவது இடத்தில் 9,919 பில்லியன் டாலர்களுடன் இங்கிலாந்தும், 9,660 பில்லியன் டாலர்களுடன் ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளது. 8,230 பில்லியன் டாலர்களுடன் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது.


சொத்து மதிப்பீட்டில் வளர்ச்சியடைந்த நாடுகளான கனடா (6,393 பில்லியன் டாலர்கள்), ஆஸ்திரேலியா (6,142 பில்லியன் டாலர்கள்), பிரான்ஸ் (6,649 பில்லியன் டாலர்கள்) , இத்தாலி (4,276 பில்லியன் டாலர்கள்) இந்தியாவுக்கு அடுத்த நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.