உலகின் அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 141-வது இடம்
உலகின் அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலை இந்தியா கடந்த முறையை விட, இந்த முறை பின்னோக்கி சென்றுள்ளது.
புது டெல்லி: உலகின் அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொது நல அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா கடந்த முறையை விட, இந்த முறை பின்னோக்கி சென்றுள்ளது
பொருளாதாரம் மற்றும் அமைதிக்காக ஆஸ்திரேலியாவை நிறுவனம் ஒன்று உலக நாடுகளின் அமைதி குறித்து ஆய்வு நடத்தியது. இதில் சமூக பாதுகாப்பு, உள்நாட்டு பிரச்சனைகள், சர்வதேச பிரச்சனைகள் மற்றும் நாட்டின் இராணுவ செயல்பாடு ஆகியவற்றை கொண்டு 2019-ஆம் ஆண்டின் அமைதி மிகுந்த பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஐஸ்லாந்து உலகில் மிகவும் அமைதியான நாடு என்ற பட்டயலில் முதலிடத்தில் உள்ளது. இது 2008 ஆம் ஆண்டு முதல் ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் வசித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இது நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் உலக அமைதி குறியீட்டின் (GPI) பட்டியலில் முன்னணியில் இணைந்துள்ளது.
உலகின் அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் மொத்தம் 163 நாடுகள் இடம்பெற்றுள்ளது. அதில் 141-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த முறையை விட 5 இடங்கள் பின்தங்கியுள்ளது.
இந்த பட்டியலில் தெற்கு ஆசியாவை பொருத்த வரை பர்மா 15வது இடத்தில் உள்ளது. இலங்கை 72-வது இடத்திலும், நேபாளம் 76 இடத்திலும், வங்கதேசம் 101-வது இடத்தையும் பெற்றுள்ளது. அதேபோல பாகிஸ்தான் 153வது இடத்தில் உள்ளது.
இந்தியா 5 இடங்கள் பின்தங்கி தற்போது 141-வது இடத்தை பிடித்துள்ளது. வங்கதேசம் 101-வது இடத்தையும் பிடித்துள்ளது. பட்டியலில் 163-வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் உலகிலேயே அமைதி குறைவாக உள்ள நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது