5000 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி
5000 கிமீ தூரம் வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.
பாலாசூர்: 5000 கிமீ தூரம் வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.
ராணுவத்தின் பயன்பாட்டுக்காக ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து அவற்றை பரிசோதித்து வருகிறது. குறிப்பாக நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி ரக ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்து ராணுவத்தில் இணைத்தும் இருக்கிறது.
அக்னி -5 ஏவுகணையின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, ஒடிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து இன்று சோதனை செய்து பார்க்கப்பட்டது. அக்னி 5 ஏவுகணை 5,500 முதல் 5,800 கி.மீ-க்கும் அதிகமான தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. குறிப்பாக வடக்கு சீனா வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
50 ஆயிரம் கிலோ எடை கொண்ட அக்னி-5, 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும் கொண்டது. இதற்கான நான்கு கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி -5 ஏவுகணையின் முதலிரண்டு சோதனைகள் 2012 ஏப்ரல் 19-ம் தேதியிலும், 2013 செப்டம்பர் 15-ம் தேதியிலும் மாதத்திலும் நடத்தப்பட்டது. இந்த ஏவுகணையின் 3-வது சோதனை 2015 ஜனவரி 31-ம் தேதியிலும் நடத்தப்பட்டுள்ளது.
அக்னி ரக ஏவுகணைகளில் அக்னி-1 ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரமும், அக்னி-2 ஏவுகணை 2 ஆயிரம் கி.மீ. தூரமும், அக்னி-3 ஏவுகணை 2,500 கி.மீ. தூரமும், அக்னி-4 ஏவுகணை 3,500 கி.மீ. தூரமும் சென்று தாக்கவல்லவை. இந்த வரிசையில் அக்னி-5 ஏவுகணை மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். அக்னி-5 ஏவுகணையை இந்தியா ‘சாமாதானத்திற்கான ஆயுதம்’ என்று விளக்கி உள்ளது.
இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி–5 ரக ஏவுகணையை தயாரித்து சோதனையில் ஈடுபடுத்தும் பணி கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. நேற்று 4–வது மற்றும் நிறைவு கட்ட சோதனை ஒடிசா மாநிலம் பலாசோர் கடற்கரை அருகே உள்ள அப்துல்கலாம் தீவில் நடத்தப்பட்டது.
அக்னி–5 ஏவுகணையின் மூலம் சீனாவின் வடமேற்கு எல்லைப் பகுதியையும், ஐரோப்பா கண்டத்தின் பெரும்பகுதியையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னி–5 ஏவுகணையின் நிறைவுகட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளை பாராட்டி உள்ளனர்.