இந்தியாவின் சக்திவாய்ந்த ஏவுகணையான அக்னி-5 ஏவுகணையின் ஒடிசா மாநிலம் பாலசோரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப் பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் இருக்கும் ஏவுகணைகளில் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையான அன்கி-5. அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையானது மிகவும் துல்லியமாக இலக்கை அடையுத் திறன் கொண்டது.


சுமார் 5000km தொலைவிற்கு துல்லியமாக ஆயுதங்களை ஏந்திச் செல்லும் இந்த ஏவுகணையானது முன்னதாக சோதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த ஏவுகணையின் 6-வது சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அக்னி-5 ஏவுகணையினை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதன் மூலம், நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்திருக்கும் நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் தற்போது இந்தியாவம் இணைந்துள்ளது.