நவம்பர் இறுதிக்குள் பிரம்மோஸ் ஏவுகணைகளை multiple launch செய்யும் இந்தியா
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை உலகின் மிக வேகமாக செயல்படும் சூப்பர்சோனிக் குரூஸ் அமைப்பாகும்.
புதுடில்லி: சீனாவுடனான தொடர்ச்சியான பதற்றங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இந்த மாத இறுதிக்குள் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் மிகப்பெரிய சோதனையை மேற்கொள்ள இருக்கிறது. இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஏவுகணை அமைப்பின் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை அதன் வகுப்பில் உலகின் மிக விரைவான செயல்பாட்டு அமைப்பாகும், சமீபத்தில் ஏவுகணை அமைப்பின் வரம்பை தற்போதுள்ள 298 கிமீ என்பதில் இருந்து 450 கிமீ வரை நீட்டித்துள்ளது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு ((DRDO).
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வெவ்வேறு இலக்குகளுக்கு எதிராக நவம்பர் கடைசி வாரத்தில் பிரம்மோஸின் பல சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சோதனைகள் ஏவுகணை அமைப்பின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவது முப்படைகளுக்கும் உதவும் என்று அரசாங்க வட்டாரங்கள் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.
கடந்த இரண்டு மாதங்களில், டி.ஆர்.டி.ஓ புதிய மற்றும் ஏற்கனவே உள்ள ஏவுகணை அமைப்புகளை சோதனை செய்வதில் ஈடுபட்டுள்ளது, அவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஷெளரியா ஏவுகணை அமைப்பு (Shaurya missile system) 800 கி.மீ.க்கு மேல் உள்ல இலக்குகளை எட்டக்கூடியது. அதுமட்டுமல்ல, ஹைபர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தையும் (hypersonic missile technology) கொண்டது.
சமீபத்தில், இந்திய விமானப்படை தனது சுகோய் -30 விமானத்தை பஞ்சாபில் உள்ள ஹல்வாரா விமான நிலையத்திலிருந்து பறக்கவிட்டு, பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது. வங்காள விரிகுடாவில் ஒரு பழைய போர்க்கப்பலின் மீது பிரம்மோஸ் ஏவப்பட்டது. ஏவுகணையின் வான்வழி ஏவப்பட்ட பதிப்பு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் விமானப்படையின் ஒரு படைப்பிரிவாக இணைக்கப்பட்டுள்ளது.
சீனாவுடனான மோதல் தொடங்கியதும், சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கால்வான் பள்ளத்தாக்கில் உயிர் இழந்தனர். அப்போது, பிரம்மோஸ் ஏவுகணை பொருத்தப்பட்ட விமானமும் வடக்கு எல்லைகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டது.
அக்டோபரில், இந்திய கடற்படை அதன் போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சென்னையில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை பரிசோதித்துப் பார்த்தது, கடல்களில் 400 கி.மீ க்கும் அதிகமான தொலைவில் இருக்கும் இலக்குகளை தாக்கும் திறனை பிரம்மோஸ் வெளிப்படுத்தியது.
பிரமோஸ் என்பது ஒரு சிறு இறக்கையுடன் கூடியது, குறைந்த உயரத்தில் பறக்கவல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரையில் இருந்தும் ஏவப்படக்கூடியது. இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு ((DRDO) மற்றும் ரஷ்யாவின் NPO Mashinostroyeniya நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ஏவுகணை ஆகும்.
இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மாஸ்க்வா ஆகிய நதிகளின் பெயர்களை இணைத்து உருவாக்கப்பட்டது BrahMos ஏவுகணை. பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இந்தியாவின் முப்படைகளுக்கும் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக மாறியுள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR