தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) ஒப்புதல் அளித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின்படி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் நோக்கம் நாட்டின் ஒவ்வொரு குடியிருப்பாளரின் விரிவான அடையாள தரவுத்தளத்தை உருவாக்குவதாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது 2020 ஏப்ரல் 1 முதல் துவங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சட்டத்தின்படி, தேசிய மக்கள் தொகை பதிவு-க்கான ஒரு 'வழக்கமான குடியிருப்பாளர்' என்பது ஒரு பகுதியில் குறைந்தது ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வாழ்ந்த நபர் அல்லது ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளில் வாழ விரும்பும் நபர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தேசிய மக்கள் தொகை பதிவில் பதிவு செய்வது கட்டாயம் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய மக்கள்தொகை பதிவை எதிர்த்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) தயாரிப்புகளை எளிதாக்குவதற்காக தேசிய மக்கள் தொகை பதிவு(NPR)-னை புதுப்பிப்பதற்கான செயல்முறைக்கு மாநில அரசு ஒத்துழைக்காது என்று தெரிவித்துள்ளார்.


மேற்கு வங்காளத்தைத் தவிர, கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய நாடுகளும் தங்கள் மாநிலங்களில் சட்டத்தை செயல்படுத்த மறுத்துவிட்டன, இருப்பினும் இந்த விஷயத்தில் மாநில அரசிற்கு வேறு வழியில்லை என்று மத்திய அரசு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.


முன்னதாக, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) புதுப்பிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பயிற்சிக்கு ரூ.8,500 கோடி செலவாகும் என்று அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு "வழக்கமான குடியிருப்பாளரின்" விரிவான அடையாள தரவுத்தளத்தை உருவாக்குவதே NPR இன் நோக்கம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் கூறியுள்ளது. 


சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்கான NRC செயல்முறை ஏற்கனவே நடத்தப்பட்ட அசாம் தவிர அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை NPR செயல்முறை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


NPR-க்கான தரவு முதன்முதலில் 2010-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் இரண்டாவது காலப்பகுதியில் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.