புதுடெல்லி: டிசம்பர் 25ஆம் தேதி இரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், ஒமிக்ரான் கொரோனா தடுப்பூசி என பல முக்கிய விஷயங்களைப் பற்றி பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓமிக்ரான் பரவல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என மக்களிடம் கேட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. மூன்றாம் தவணையாக போடப்படும் பூஸ்டர் தடுப்பூசி என்பது முன்னெச்சரிக்கைத் தவணை என்று பிரதமர் குறிப்பிட்டார்.


பிரதமரின் உரையின் முக்கிய சாரம்சங்கள்:


ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவகிறது
உலகின் முதல் டி.என்.ஏ., தடுப்பூசி (DNA Vaccine) இந்தியாவில் வர உள்ளது 
இந்தியாவில் விரைவில் மூக்கு வழியாக தடுப்பூசி செலுத்தும் முறை அறிமுகமாகும்
உலகின் முதல் மரபணு  தடுப்பூசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது
கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதம்


ALSO READ | ஒமிக்ரான் வைரஸ்: தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 100% ஆபத்து உறுதி!


கோவா மற்றும் உத்தரகண்டில் முதல் தவணை தடுப்பூசி 100% செலுத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் தகுதியுள்ளவர்களில் 90% மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது
நாட்டில் தகுதியுள்ளவர்களில் 61% மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது
இந்தியாவில் 12 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல்
பாரத் பயோ டெக் நிறுவனத்திற்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையும் ஒப்புதல்
12 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்த பரிசோதனைகள் நடந்த நிலையில் அனுமதி
ஜனவரி 10ம் தேதி முதல் முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளருக்கு பூஸ்டர் தடுப்பூசி 
60 வயது கடந்தவர்கள் மற்றும் இணைநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் தேவைப்பட்டால் பூஸ்டர் தடுப்பூசி
கொரோனாவை சமாளிக்க 18 லட்சம் தனிமை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது
5 லட்சம் ஆக்ஸிஜன் படுக்கைகள் தயாராக உள்ளன
1.4 லட்சம் தீவிர சிகிச்சை படுக்கைகள் தயாராக உள்ளது 
90000 குழந்தைளுக்கான படுக்கைகள் தயாராக உள்ளது
முகக்கவசம் அணிவது கட்டாயம்
கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்


ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR