இந்திய தயாரிப்பு சீக்கரை பயன்படுத்தி பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
முதல்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சீக்கர் பொருத்தப்பட்டு பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்தியா ரஷ்யா கூட்டு முயற்ச்சியில் பிரம்மோஸ் ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏவுகணை சோதனை செய்யும் போது ரஷ்ய நாட்டு சீக்கர் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் முதல் முறையாக இன்று காலை 8:42 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் தளத்தில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனையின் போது, இந்தியாவால் தயாரிக்கப்பட்ட சீக்கர் பொறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச்சோதனை வெற்றிகரமாக அமைந்தது.
உள்நாட்டு தயாரிப்பு சீக்கரை பயபடுத்துவது மூலம், நாட்டுக்கு செலவும் குறைவு. மேலும் மற்ற நாடுகளை நம்பி இருக்க வேண்டியதில்லை.
இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததை அடுத்து, இந்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டி உள்ளார்.
பிரம்மோஸ் ஏவுகணை சீனா மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளை எதிர்க்கும் பெரிய சக்தியாக நமக்கு உள்ளது. இந்த ஏவுகணைகளை பலவகைகளில் உபயோகிக்கலாம். எல்லை தாண்டி உள்ள பயங்கரவாத கேம்புகளை அதிதுல்லியத்துடன் தாக்கலாம். கடல் இலக்குகளான கப்பல்கள், விமானம் தாங்கி கப்பல்கள் உட்பட அனைத்தையும் அடிக்கலாம். நியூக்ளியர் பங்கர்கள் போன்றவற்றை கூட தாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.