இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும்: இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை
இந்த சம்பவத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். தூதரகம் மற்றும் இஸ்ரேலிய தூதர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் எஸ்.ஜெய்ஷங்கர்.
ஜெருசலேம்: புதுடில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடித்ததைத் தொடர்ந்து இந்தியாவில் இஸ்ரேலியர்கள் மற்றும் யூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அதிகாரிகள் முழு முனைப்புடன் செயல்படுவார்கள் என தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். லுடீயன்ஸ் டெல்லி பகுதியில், இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை மாலை குறைந்த தீவிரம் கொண்ட (IED) குண்டுவெடிப்பு நடந்தது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் டோவல் (Ajit Doval) இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீர் பென்-சப்பாத்துடன் இது குறித்து பேசினார். இஸ்ரேலிய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு தொடர்பான நிலைமை பற்றியும் அதுகுறித்த விசாரணை குறித்தும் அவருக்கு தகவல்களை அளித்தார். இந்த தகவல்களை பிரதமர் நெதன்யாகுவுக்கு தெரிவிக்கப்பட்டன.
"இந்த சம்பவம் குறித்து இந்திய அதிகாரிகள் முழுமையான விசாரணை செய்து இஸ்ரேலியர்கள் மற்றும் அங்குள்ள யூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என்று இஸ்ரேலுக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்று இந்திய பிரதிநிதி நரேந்திர மோடியிடம் (Narendra Modi) தெரிவிக்குமாறு நெத்தன்யாகு கேட்டுக் கொண்டார். அனைத்து வழிகளிலும் முழு ஒத்துழைப்பைத் தொடர இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் (S Jashankar) இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் காபி அஷ்கெனாசியுடன் பேசி இஸ்ரேலிய பிரதிநிதிகளுக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்தார்.
ALSO READ: Delhi bomb blast: முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியது டெல்லி போலீஸ்
இந்த சம்பவத்தை இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக ஒரு ட்வீட்டில், ஜெய்சங்கர் தெரிவித்தார். "இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே நடந்த குண்டு வெடிப்பு குறித்து இஸ்ரேலிய (Israel) எஃப்.எம். காபி அஷ்கெனாசியிடம் இப்போது பேசினேன். இதை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். தூதரகம் மற்றும் இஸ்ரேலிய தூதர்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாக அவருக்கு உறுதியளித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது என்ற அமைச்சர் "குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அதன் தூதரக ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று கூறியது. "சிறிது நேரத்திற்கு முன்பு, புதுதில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. இதில் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை மற்றும் கட்டிடத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. அனைத்து இஸ்ரேலிய தூதரக ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்" என்று வெளியுறவு அமைச்சக வெளியீடு தெரிவித்தது.
குண்டுவெடிப்பு மிகக் குறைந்த தீவிரம் கொண்டதாக இருந்தது என்று டெல்லி காவல்துறை (Delhi Police) கூடுதல் பி.ஆர்.ஓ அனில் மித்தல் கூறியுள்ளார். "எந்தவொரு நபருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அருகிலேயே நிறுத்தப்பட்டுள்ள மூன்று வாகனங்களின் கண்ணாடி தவிர சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை" என்று அவர் கூறினார்.
ஆரம்ப கட்ட விசாரணையில், பீதியை பரப்புவதற்காக சில விஷமிகள் செய்த செயலாக இது இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Breaking: தில்லியில் குண்டு வெடிப்பு, இஸ்ரேல் தூதரகம் அருகில் வெடித்தது குண்டு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR