வரலாறு, கலாச்சாரம் மரபுகளால் இந்தியா பூடான் இடையே ஆழமான பிணைப்பு உள்ளது: மோடி
வரலாறு, கலாச்சாரம், ஆன்மீக மரபுகளால் நம் இரு தேசங்களுக்கும் இடையே ஆழமான பிணைப்பு உருவாகியுள்ளது என பூடானில் ராயல் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு!!
வரலாறு, கலாச்சாரம், ஆன்மீக மரபுகளால் நம் இரு தேசங்களுக்கும் இடையே ஆழமான பிணைப்பு உருவாகியுள்ளது என பூடானில் ராயல் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு!!
இந்திய பிரதமர் நரேந்திரமோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று பூட்டான் சென்றடைந்தார். இதையடுத்து சிம்தோகா த்சோங்கில் வாங்குவதன் மூலம் ரூபே அட்டையை மோடி பூடானில் அறிமுகப்படுத்தினார். இதை தொடர்து இன்று காலை திம்புவில் உள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது; பூடானுக்கு யார் வந்தாலும் அதன் இயற்கை அழகு, ரம்மியம், மக்களின் எளிகை ஆகியவை அனைவரையும் கவரும். பூடானுக்கும், இந்தியாவுக்கும் இடையே மிகப் பெரிய பிணைப்பு இருப்பது இயற்கையானது. நாம் புவியியல் ரீதியாக மட்டுமல்ல வரலாறு, கலச்சாரம், ஆன்மிக பண்பாடு ஆகியன இரு நாடுகள் மற்றும் நாட்டு மக்களிடையே தனித்துவம் வாய்ந்த பிணைப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், "500 மில்லியன் இந்தியர்களுக்கு சுகாதார உத்தரவாதத்தை வழங்கும் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் இந்தியாவில் உள்ளது… உலகில் மலிவான தரவு இணைப்பில் இந்தியா உள்ளது, இது மில்லியன் கணக்கானவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் மேம்படுத்துகிறது. உலகின் மிகப்பெரிய தொடக்க சூழல் அமைப்புகளில் இந்தியாவும் உள்ளது. இது உண்மையில் இந்தியாவில் புதுமைப்படுத்த ஒரு சிறந்த நேரம்!" என அவர் கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய அவர், எனது 'Exam Warriors' புத்தகத்தில் நான், புத்தரின் போதனைகளால், குறிப்பாக முக்கியமான நேர்மறையான, பயத்தை எதிர்கொள்ளுதல், தனித்து இருத்தல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளேன். பூடானின் சிறிய ரக செயற்கைகோளை ஏவுவதற்காக பூட்டானிய விஞ்ஞானிகள் இந்தியா வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களில் பலர் விஞ்ஞானிகளாகவும், இன்ஜினியர்களாகவும், கண்டுபிடிப்பாளர்களாகவும் விரைவில் வருவீர்கள் என நம்புகிறேன்.
2022 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இந்தியாவிடம் உள்ளது. சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானது என மோடி மாணவர்களிடையே உரையாற்றினார்.