மியான்மர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்!!
மியான்மர் எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து நாகா தீவிரவாத அமைப்பினரின் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல தீவிவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இதனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் உளவுத்துறை அளித்த தகவல் அடிப்படையில் நடத்தப்பட்டது. 70 இந்திய ராணுவ வீரர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.45 மணிக்கு இந்த தாக்குதல் நடந்தது.
இந்திய ராணுவம், மியான்மர் எல்லையில் தாக்குதல் நடத்துவது இது 2வது முறையாகும். கடந்த 2015 ஜூன் மாதம், இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதேபோல், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கை:-
செப்டம்பர் 27-ம் தேதி அன்று அதிகாலையில், இந்திய மியான்மர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மீது அடையாளம் தெரியாத சில தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக இந்திய ராணுவரும் பதிலடி கொடுத்தது.
இவர்கள் இவர்களுக்கு இடையே நடந்த தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. இதனால், அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். ராணுவத்திற்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தீவிரவாதிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கு எந்த பதிப்பும் இல்லை. ராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதே தவிர, இந்திய ராணுவம் சர்வதேச எல்லையை தாண்டவில்லை.
இவ்வாறு இந்திய ராணுவம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.