யார் தாக்குதல் நடத்தினாலும் இந்திய இராணுவம் முழுவீச்சில் தயாராக உள்ளது என லெப் ஜென் ரன்பீர் சிங் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக பாகிஸ்தான் இந்தியா ஒரு சர்ஜிகல் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பத்து தாக்குதல் நடத்தும் என மிரட்டியிருந்தது.அதற்கு பதிலளித்த இந்திய இராணுவத்தின் லெப் ஜென் ரன்பீர் சிங் இராணுவம் முழு தயாராக உள்ளது என பதிலடி கொடுத்துள்ளார்.


ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் லெப் ஜென் ரன்பீர் சிங் கூறியது, 


“இந்திய இராணுவம் முழுவதும் தயாராக உள்ளது என்பதை உறுதிப்பட கூறுகிறேன். தேவைப்படும் பட்சத்தில் எந்தவித சவாலான கடின வேலையையும் எடுக்க முடியும். இந்தியா மீது பத்து தாக்குதல் நடத்துவோம் என யார் கூறினாலும் எனக்கு கவலை இல்லை. 


பயங்கரவாத ஊடுருவல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ஊடுருவல் எதிர்ப்புக்காக எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பல மடங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் தான் எங்களால் அதிக அளவுக்கு பயங்கரவாதிகளை வேட்டையாட முடிகிறது. 


தற்போது வரை கிடைத்த தகவல்படி எல்லை தாண்டி பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாமில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும். பாகிஸ்தானால் பயிற்சியளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் தொடர்ந்து இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர்.” எனவும் கூறினார்.