ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் கட்டுப்பாட்டுக் கோடுக்கு அருகே பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணா காடி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரரின் பெயர் ரவி ரஞ்சன் குமார் சிங். இவருக்கு வயது 36. பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் துருப்புக்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் நான்கு வீரர்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் காலை 11 மணியளவில் மெந்தர் செக்டரில் ஆயுத தாக்குதல் நடத்துவதற்கும், மோட்டார் குண்டுகளை வீசுவதற்கும் முயன்றனர். அதற்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி தந்தது.


"இந்திய இராணுவம் வலுவாகவும் திறமையாகவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த பதிலடி மூலம் பாகிஸ்தான் இராணுவத்துக்கு கடும் சேதம் செய்யப்பட்டுள்ளன” என்று பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்ததை வடக்கு கமாண்டோ பிரிவு இராணுவம் தனது இரங்கல் செய்தியை ட்வீட் செய்ததுள்ளது. அதில் லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் மற்றும் மற்ற இராணுவ வீரர்கள் அனைவரும் ரவி ரஞ்சன் குமார் சிங்கின் மகத்தான தியாகத்திற்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.