முப்படைகள் ஒருங்கிணைந்து செயல்பட வருகிறது நாட்டின் முதல் Theater Command...!!!
போரின் போது மூன்று படைகளுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த இந்த தியேட்டர் கமாண்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நாட்டில் முப்படைகளுக்கு விரைவில் முதல் தியேட்டர் கமாண்ட் கிடைக்க உள்ளது. அது எவ்வாறு செயல்படும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
போரின் போது மூன்று படைகளுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த இந்த தியேட்டர் கமாண்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இங்கிருந்து உருவாக்கப்படும் உத்திகளின் அடிப்படையில், எதிரிகளை துல்லியமாக தாக்குவது எளிது.
புதுடெல்லி(New Delhi): அடுத்த ஆண்டுக்குள், இந்திய ராணுவத்தில் முதல் தியேட்டர் கமாண்ட் உருவாக்கப்படும். இராணுவம், கப்பல் படைகள் மற்றும் விமானப்படைகள் தியேட்டர் கமாண்டின் அங்கமாக இருக்கும். போரின் போது மூன்று படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை சிறப்பாக ஏற்படுத்த, தியெட்டர் கமாண்ட் முக்கிய பங்காற்றும், நாட்டில் 2 முதல் 5 தியேட்டர் கமாண்ட்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
ALSO READ | சீனாவில் வெளியிடப்படும் பாலிவுட் படங்களின் நிலை என்ன.....!!!
இந்திய சீன எல்லையில், பதற்றம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், தியேட்டர் கட்டளையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
போர் மூண்டால், எதிரிகளை மீது சிறந்த முறையில், முப்படைகள் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்த, இந்த தியேட்டர் கமாண்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இங்கிருந்து உத்திகள் உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைந்து செயல்படும் போதும் எதிரிகளை துல்லியமாக தாக்குவது எளிது. இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த தியேட்டர் கமாண்டை உருவாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதற்கு இதுவே காரணம்.
ALSO READ | ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூட அமெரிக்க உத்தரவு: பதிலடி கொடுக்க சீனா சபதம்
நாட்டின் முப்படைகளுக்கான முதல் தளபதியாக (CDS) பதவி ஏற்றுக் கொண்ட, ஜெனரல் பிபின் ராவத், எதிர்காலத்தில் நாட்டில் தியேட்டர் கமாண்ட்கள் உருவாக்கப்படும் என்று கூறியிருந்தார், இதனால் போரின் போது எதிரிகளை நிலைகுலையச் செய்ய ஒரு மூலோபாயத்தை எளிதில் உருவாக்க முடியும்.