இந்திய சீன எல்லையில் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் காரணமாக பாலிவுட் படங்கள் சீனாவில் புறக்கணிக்கப் படும் என்று இந்திய நண்பர்கள் சிலர் தன்னிடம் கவலை வெளியிட்டதாக குளோபல் டைம்ஸ் எழுத்தாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
புதுடெல்லி (New Delhi): இந்தியாவும் சீனாவும் லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் பகுதியில், சீனா படைகளை பின்வாங்க செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன.
கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல்லில் 20 இந்திய வீரர்கள் கொலை செய்யப்பட்டதை அடுத்து, 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ள நிலையில், சீன நாளேடான தி குளோபல் டைம்ஸின் (The Global Times) தனது தலையங்கத்தில் பாலிவுட் திரைப்படங்களை சீனாவில் வெளியிடப்படும் நாளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.
ALSO READ | அண்டார்டிகாவின் கடற்பரப்பில் மீத்தேன் கசிவு.. விஞ்ஞானிகள் கவலை.. !!!
COVID-19 தொற்றுநோயால் திரைப்பட உலகம் கடுமையாக பாதிக்கப்பட்டு போராடி வரும் நிலையில், 2015 ஆம் ஆண்டின் இந்திய திரில்லர் படமான த்ரிஷ்யம் சீனாவின் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியை குவித்து வருகிறது என்பது மிகவும் ஆச்சரியம் தரும் விஷயமாகும்.
த்ரிஷ்யம் படத்தின் சீன ரீமேக் ஆன ஷீப் வித்யூட் எ ஷெப்பர்ட் (Sheep Without a Shepherd) 30 லட்சம் யுவான் ($430,095) வசூல் செய்துள்ளது. சீனாவின் முக்கிய தியேட்டர்கள் திங்களன்று மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, Coco மற்றும் சீனாவின் Wolf Warrior 2 போன்ற ஹாலிவுட் வெற்றி படங்களின் போட்டியையும் மீறி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என அந்த சீன பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த எல்லை மோதலால் சீனாவில் பாலிவுட் படங்கள் புறக்கணிக்கப்படலாம் என இந்திய நண்பர்கள் சிலர் கவலை வெளியிட்டனர் என கூறிய அப்பத்திரிக்கை எழுத்தாளர் ஒருவர் கூறினார். இருப்பினும், சீனாவின் ட்விட்டர் போன்ற சமூக ஊடகமான சினா வெய்போ (Sina Weibo) மற்றும் பிற முக்கிய செய்தி ஊடகங்களில் பாலிவுட் படங்களை புறக்கணிக்க வேண்டும் என அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை என்பதால் இதுபோன்ற கவலை மிகைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது என அவர் மேலும் கூறினார்.
ALSO READ | தண்டனையைத் தவிர்க்க போலி மரண சான்றிதழ்.. எழுத்து பிழையால் சிக்கிய பரிதாபம்..!!!
பாலிவுட் நட்சத்திரங்களான அமீர்கான், சல்மான் கான் மற்றும் ஷாருக் கான் உட்பட பல பிரபலங்களின் படங்கள் புறக்கணிக்கப்படும் இந்தியாவில் சமூக ஊடகங்களில் சில கருத்து தெரிவித்தாலும் நிலைமை முற்றிலும் வேறாக உள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு உள்ளது என தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.