10+2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு
இந்திய ராணுவத்தில் 42-வது 10+2 தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் 10, +2 வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு.
டெல்லி: இந்திய ராணுவத்தில் 42-வது 10+2 தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (TECHNICAL ENTRY SCHEME COURSE 42, FROM JAN 2020) பயிற்சியுடன் கூடிய அதிகாரி வேலைக்குச் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்க்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும். மொத்தம் 90 காலியிடங்கள் உள்ளது.
பணி: இந்திய இராணுவம்
மொத்த காலியிடங்கள்: 90
கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதவியல் பாடங்கள் கொண்ட பிரிவில் 70 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ (10+2 முறையில் படித்து) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி: 42-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்-42, ஜனவரி 2020)
வயது: விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 01.07.2000 மற்றும் 01.7.2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்.எஸ்.பி நடத்தும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வானது முதல் நிலை, இரண்டாம் நிலையென இருநிலைகளில் நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல் தகுதி மற்றும் மருத்துவப் பரிசோதனை தேர்வு நடத்தப்பட்டுத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மொத்தம் ஐந்து ஆண்டு கால பயிற்ச்சி அளிக்கப்படும். ஒரு வருடம் அடிப்படை இராணுவ பயிற்சி அளிக்கப்படும். தொழில்நுட்ப பயிற்சி நான்கு வருடம் அளிக்கப்படும்.,
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.06.2019
www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/tes_42.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.