இந்திய இராணுவத்தின் 'ஆபரேஷன் மா' மூலம் ஜம்மு-காஷ்மீரின் 60 இளைஞர்களை பயங்கரவாத குழுக்களிடமிருந்து மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த எட்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட இலக்கு திட்டத்தின் மூலம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் சுமார் 60 உள்ளூர் இளைஞர்களை இந்திய ராணுவம் களையெடுத்துள்ளது என்று வட்டாரங்கள் திங்கள்கிழமையன்று தெரிவித்துள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ் தில்லான் அதன் தளபதியாக நியமிக்கப்பட்ட உடனேயே, இந்த திட்டத்தை - `ஆபரேஷன் மா` - ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் (15 கார்ப்ஸ்) பிப்ரவரி மாதம் தொடங்கினார்.


"இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ள அடிப்படை நோக்கம், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுக்களால் பயங்கரவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட இளைஞர்கள் மீண்டும் பிரதான சமூகத்தின் மடிக்குள் கொண்டுவரப்படுவதை உறுதி செய்வதாகும். இந்தியாவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் விதமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரை சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர்த்து வருகின்றனர். மேலும் இது போன்ற இளைஞர்களுக்கு பண உதவியும் வழங்கி வந்தனர். இதனால் உள்ளூரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை காஷ்மீர் இளைஞர்கள் எதிரியாகவே பாவிக்கும் நிலை மாறியது.


எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு, பயங்கரவாதிகள் சுட்டு கொல்வது என ராணுவத்தினர் வெற்றி பெற்றாலும் , உள்ளூர் இளைஞர்களை சரி செய்வதற்காக ராணுவத்தினர் " ஆபரேஷன் மா "- என்ற திட்டத்தை துவக்கினர். 15 வீரர்கள் கொண்ட இந்த குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு லெப்டினன்ட் ஜெனரல் தில்லான் தலைமை கமாண்டராக நியமிக்கப்பட்டார். இந்த குழுவினர் உளவுதுறையினர் மூலம் பயங்கரவாத தொடர்புடையவர்களை அழைத்து அன்பாக பேசி அவர்களை திருத்துவதே இவர்களின் முக்கிய பணி. முதலில் சம்பந்தப்பட்ட இளைஞர்களின் தாய்களிடம் பேசுவது, இவர்கள் மூலம் இந்த இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குவது என துவங்கி, பல முறைகளில் மனம் மாற்றப்படுவர்.


இந்த முயற்சிக்கு நல்ல வெற்றி கிடைத்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: இது வரை 60 பேர் மனம் திருந்தியுள்ளனர். அவர்களுக்கான மன நல ஆலோசனைகள் வழங்குவது, அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பது முக்கிய பணியாகும். இன்னும் 20 பேர் வரை திருத்தும் பணி நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.