விரைவில் விஜய் மல்லையா இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்: சிபிஐ
விஜய் மல்லையா விவகாரத்தில் லண்டன் நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் வரவேற்கின்றோம் என மத்திய புலனாய்வு குழு கூறியுள்ளது.
இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி (ரூ. 9,000) கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், 2016 ஆம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் அடைந்தார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசு சார்பில், இங்கிலாந்து வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் தீர்பு இன்று வெளியானது. அந்த தீர்ப்பில் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் தீர்ப்பின் நகலை பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் அனுப்பி உள்ளது. இதுக்குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு இந்தியா ஆலோசனை செய்து வருகிறது.
இதுக்குறித்து CBI செய்தித் தொடர்பாளர் கூறுகையில், லண்டன் நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் வரவேற்கின்றோம். லண்டனிலிருந்து விஜய் மல்லையா விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவர் என நம்புகிறேன். இந்த வழக்கை பொருத்த வரை சிபிஐ மிகவும் கடுமையாக உழைத்தது. நாங்கள் வெற்றி பெறுவோம் என முழு நம்பிக்கை வைத்திருந்தோம், ஏனென்றால் விஜய் மல்லையாவுக்கு எதிராக உறுதியான சான்றுகள் எங்களிடம் இருந்தது. நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக சரியான ஆதாரங்களை பதிவு செய்தோம் எனக் கூறினார்.