பற்றி எரிந்த கப்பல் தீயை அணைக்க இலங்கைக்கு உதவியது இந்திய கடலோர காவல்படை!!
வெள்ளிக்கிழமை காலை முதல் ICG தீயணைப்பு கப்பல்கள் உறுதியான ஒத்துழைப்பை அளித்து, கடுமையாகப் போராடியதில் தீயில் சிக்கிய 23 பேரில் 22 பேர் காப்பாற்றப்பட்டனர்.
புதுடெல்லி: இலங்கையின் கிழக்கு கடற்கரையில் 'MT New Diamond' என்ற எண்ணெய் டேங்கரில் பற்றிய தீயை அணைக்க இந்திய கடலோர காவல்படை (ICG) தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
வெள்ளிக்கிழமை காலை முதல் ICG தீயணைப்பு கப்பல்கள் (Fire Fighting Ships) உறுதியான ஒத்துழைப்பை அளித்து, கடுமையாகப் போராடியதில் தீயில் சிக்கிய 23 பேரில் 22 பேர் காப்பாற்றப்பட்டனர். காணாமல் போன ஒரு குழு உறுப்பினரைத் தேடும் பணி நடந்துகொண்டிருப்பதாக ICG தெரிவித்தது.
இந்த சம்பவம் பற்றி ICG தனது ட்விட்டர் அகௌண்டில், “கூட்டு எஸ்.ஏ.ஆர் (SAR), ICG கப்பல்கள், இலங்கை கடற்படை (Sri Lankan Navy) ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கைகளின் விளைவாக, 23 பேரில் 22 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். காணாமல் போன ஒரு குழு உறுப்பினரைத் தெடும் பணி நடந்துகொண்டிருக்கின்றது. இங்கு எண்ணெய் கசிவு பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 02 அவசர தோண்டும் கப்பல்கள் MTNewDiamond-க்காக இந்திய அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.
ALSO READ: ‘இந்தியாவுக்குத் தான் முதலிடம்’: சீனாவிற்கு அதன் இடத்தைக் காட்டிய இலங்கை!!
இலங்கை கடற்கரையிலிருந்து கிழக்கே 37 கடல் மைல் தொலைவில் உள்ள எண்ணெய் டேங்கர் `எம்டி நியூ டைமண்ட்` -ல் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினரின் உதவி கோரப்பட்டதை அடுத்து, இன்று காலை, ICG தீயணைப்பு கப்பல்கள் உதவிக்கு விரைந்து தீயை அணைத்தன.
வியாழக்கிழமை (செப்டம்பர் 3, 2020), இலங்கை கடற்படை தீயணைப்புக்கு தங்கள் உதவியை நாடியதாக கடலோர காவல்படை கூறியிருந்தது. பனாமா கொடியிடப்பட்ட எண்ணெய் டேங்கரில் ஏற்பட்ட பெரிய தீயை அணைக்க மூன்று கப்பல்கள் மத்திய கிழக்கு இலங்கை கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஷௌர்யா, சாரங் மற்றும் சமுத்ரா பெஹ்ரேதார் ஆகிய ICG கப்பல்கள் அணிதிரட்டப்பட்டு அனுப்பப்பட்டன. கடலோர காவல்படை கப்பல்களைத் தவிர, ஒரு டோர்னியர் விமானமும் இந்த நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எண்ணெய்-டேங்கர் இலங்கை கடற்கரையிலிருந்து சுமார் 36 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கப்பல் குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தபோது வெடிப்பு ஏற்பட்டது மற்றும் என்ஜின் அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகள், ICG கப்பல்கள், இலங்கை கடற்படை ஆகியவை இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் இரண்டு அவசர தோண்டும் கப்பல்கள் இந்தியா மூலம் நிறுத்தப்பட்டுள்ளன.
ALSO READ: உதவிக்கரம் நீட்டும் இந்தியா: கோவிட்-19 நிவாரணத்திற்காக இலங்கையுடன் Currency Swap!!