சீண்டினால் சிதறிப்போவீர்கள்... ராஜ்நாத் சிங் சீனாவிற்கு எச்சரிக்கை..!!!
நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம் என்று இந்தியா திட்டவட்டமாக சீனாவிடம் தெரிவித்துள்ளது.
நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம் என்று இந்தியா திட்டவட்டமாக சீனாவிடம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சருக்கு இடையிலான மாஸ்கோ சந்திப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங்கை, ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை சந்தித்தார். மூன்று மாத காலமாக, லடாக்கில் உள்ள இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த முதல் அரசியக்ல் ரீதியிலான சந்திப்பு ஆகும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாடுகளின், பாதுகாப்பு அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த, இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
கடந்த சில மாதங்களாக இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளின் கால்வான் பள்ளத்தாக்கு உட்பட எல்ஏசியில் உள்ள பதற்றம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை பாதுகாப்பு அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார். சீன துருப்புக்களின் நடவடிக்கைகள், ஏராளமான துருப்புக்களை குவித்தல், அவர்களின் அத்து மீறிய நடவடிக்கை மற்றும் ஒருதலைப்பட்சமாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஆகிய அனைத்தும், இருதரப்பு ஒப்பந்தங்களை மீறுவதாகவும், இருவரின் சிறப்பு பிரதிநிதிகளிடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
"எனவே, பாங்கோங் ஏரி உள்ளிட்ட பதற்றம் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும், இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்க எல்லைப் பகுதிகளில் விரைவில் முழுமையான படைகளை விலக்கிக் கொள்ள சீனத் தரப்பு, இந்தியத் தரப்புடன் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்று பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாங்காங் ஏரி பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா கடுமையாக ஆட்சேபணை தெரிவித்ததாகவும், பாதுகாப்பு அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில், எல்லை பிரச்சனைக்க்கு நீண்ட கால தீர்வை ஏற்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | "அமைதி ஏற்பட நம்பிக்கை தேவை": சீன பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் ராஜ்நாத் சிங்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பேசிய,ராஜ்நாத் சிங் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு ஏற்பட, அத்துமீறல்கள் ஏதும் இல்லாமல், அமைதியான கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பது மற்றும் சர்வதேச விதிகளுக்கு மதிப்பளித்தல் அகியவை தேவை என கூறினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது எட்டு நாடுகளின் குழுவாகும்.
கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஜூன் மாதம் ஏற்பட்ட வன்முறை மோதலில், 20 வீரர்கள் இந்தியாவுக்காக தங்கள் உயிரைக் தியாகம் செய்து வீர மரணம் அடைந்தனர்.இதில் 40 க்கும் மேற்பட்ட சீன படையினர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என கூறப்படுகிறது. எனினும் சீனா இது தொடர்பான தக்வலை வெளியிடாமல் மறைத்து வருகிறது.
ஐந்து நாட்களுக்கு முன்பு பாங்கோங் ஏரியின் தெற்கு பகுதியில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. அதனை நமது படைகள் முறியடித்தன. இதை அடுத்து இப்பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்தது.
இப்போது, ராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இந்தியா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | “சீண்ட நினைத்தால் சிக்கிக் கொள்வீர்கள்” – பாகிஸ்தானை எச்சரித்த CDS பிபின் ராவத்!!