புதுடெல்லி: கடந்த வார இறுதியில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்புக்குள்ளான சீனாவின் வுஹான் நகரிலிருந்து இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் மாணவர்கள் உட்பட பலர் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் டெல்லிக்கு அருகில் உள்ள மானேசர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று மாநிலங்களவையில் பேசிய இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து அண்டை நாடுகளை சேர்ந்த மாணவர்களை வுஹானில் இருந்து வெளியேற்ற இந்தியா முன்வந்ததாக தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் கூறியது, வுஹான் நகரில் ஆசியாவை சேர்ந்த பலர் சிக்கியுள்ளனர். கடந்த வாரம் இந்தியா இரண்டு விமானம் மூலம் சீனாவில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது நமது அண்டை நாடுகளை சேர்ந்த மாணவர்களையும் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மாலத்தீவு தவிர மற்ற யாரும் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள வில்லை என்று கூறினார். மேலும் மாலத்தீவை சேர்ந்த 7 மாணவர்கள் இந்திய விமான சேவை பயன்படுத்திக் கொண்டன என்றார். 


ANI அறிக்கையின்படி, "நமது நாட்டு மக்களை மட்டுமல்ல, நமது அக்கம் பக்கத்திலிருந்தும் விரும்பியவர்களை திரும்ப அழைத்து வர நாங்கள் தயாராக இருந்தோம். இது நமது அண்டை நாடுகளுக்கெல்லாம் வழங்கப்பட்ட ஒரு சலுகையாகும், ஆனால் மாலத்தீவின் ஏழு பேர் மட்டுமே இந்த வாய்ப்பைப் பெறத் தேர்ந்தெடுத்தனர்" என்று ஜெய்சங்கர் மாநிலங்களவையில் கூறினார்.


 



11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் சீன நகரமான வுஹானில் இருந்து இரண்டு சிறப்பு ஏர் இந்தியா விமானங்களில் 647 இந்தியர்களும், 7 மாலத்தீவர்களும் கடந்த வாரம் புதுடெல்லிக்கு திரும்பினர்.


இந்த விவகாரம் குறித்து பல வீடியோ செய்திகள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் சீனாவிலிருந்து வெளியேற இந்தியாவின் உதவியை நாடினர்.


வுஹான் தலைநகரான ஹூபே மாகாணத்திலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவதற்கு இந்தியா உதவுகிறதா என்று வியாழக்கிழமை கேள்வி கேட்டபோது, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், பாகிஸ்தானிடமிருந்து இந்தியாவுக்கு அத்தகைய கோரிக்கை எதுவும் வரவில்லை என்று கூறியிருந்தார். அவர்களை கோரிக்கை வைக்கும் பட்சத்தில், அதை நாங்கள் நிச்சயமாக பரிசீலிக்க முடியும் என்று அவர் கூறினார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.